அப்ப பணப்பெட்டியை யாருமே எடுக்கலையா? வெட்கம், மானம், சூடு, சொரணை என பட்டியலிட்டு பிரியங்கா ஆவேசம்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோவில் 10 லட்சம் பணப்பெட்டி வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு போட்டியாளர்களுக்கு கிடைத்தது போல அல்வா தான் போல!

இந்த சீசன் டிஆர்பி குறைந்து விட்டதால் பணப்பெட்டியை யாருமே எடுக்கக் கூடாது என சீக்ரெட்டாக கன்ஃபெஷன் ரூம் அழைத்தபோது பிக் பாஸ் கதறி இருப்பாரோ என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவில் பணப்பெட்டிக்கு பதிலாக Dare அல்லது Sacrifice கேம் ஆரம்பித்துள்ளனர்.

பணப்பெட்டி எங்கே காணோம்?

பணப்பெட்டி எங்கே காணோம்?

கடைசியாக ரூ. 7 லட்சம் வரை காட்டப்பட்ட நிலையில், தற்போது வேறு ஒரு டாப்பிக்கிற்கு பிக் பாஸ் மூன்றாவது புரமோ நகர்ந்துள்ளது. இதில் இருந்தே தெரிகிறது இந்த சீசனில் கோடி கொடுத்தாலும் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓட யாரும் விரும்பவில்லை என்று. அப்படி இல்லை என்றால் 10 லட்சத்துக்கு ஆசைப்பட்டு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக வேறு பெட்டிகள் இல்லை என பிக் பாஸ் அறிவித்து இருக்கலாம்.

அப்போ டபுள் எவிக்‌ஷனா?

அப்போ டபுள் எவிக்‌ஷனா?

பணப்பெட்டியுடன் புத்திசாலித்தனமாக யாரும் வெளியே போகவில்லை என்றால் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. தாமரை மற்றும் நிரூப் அல்லது பாவனி மற்றும் தாமரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தில் இருந்தா ஹலோ சொல்லு

தில் இருந்தா ஹலோ சொல்லு

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவில் தில் இருந்தா ஹலோ சொல்லு எனும் இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் டாஸ்க் நடத்தப்படுகிறது. அதுதான் வாரம் முழுக்க பிரியாணியும் க்ரில் சிக்கனும் கொடுக்கிறீங்களே அப்புறம் எதுக்கு பாஸ் லக்சரி டாஸ்க் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

வெறியான நிரூப்

வெறியான நிரூப்

அப்பாடா ஒரு கேம் டாஸ்க் கொடுத்துட்டாங்க என வெறித்தனமாக விளையாடி தனது ஸ்கோரை உயர்த்த நிரூப் போராடி வரும் காட்சிகளும் நிரூப்பிற்கு எதிராக அமீர் மற்றும் பிரியங்கா கொதித் தெழும் காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவில் இடம்பெற்றுள்ளன.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 5th January 2022 - Promo 1 | 3 லட்சம் இப்போ 7 லட்சமா, யார் பணப்பெட்டி எடுப்பாங்க?
வெட்கம், மானத்தை விட்டு

வெட்கம், மானத்தை விட்டு

உப்பு இல்லாம சமைக்க முடியாதா? என அமீர் நிரூப்பிடம் எகிற 90 நாட்கள் ஆகியும் லக்சரி டாஸ்க் பண்ண மாட்டோம்னா என்ன? என நிரூப் பதிலுக்கு கேட்க, இந்த வீட்டுக்குள் வந்து வெட்கம், மானம், சூடு, சொறனை என எல்லாத்தையும் இழந்து நிற்கிறோம் என ஒட்டுமொத்தமாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே வேட்டு வைக்கும் விதமாக பேசி உள்ளார். அடுத்த சீசனுக்கு எவனாவது வருவீங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X