ஜன நாயகன் முதல் நாள் வசூலை லைஃப் டைமில் வசூல் செய்யுமா பராசக்தி.. அட்வான்ஸ் புக்கிங் அனல் பறக்குதே!

சென்னை: தளபதி விஜய்க்கு 200 கோடி சம்பளம் வாங்குகிறார் என்றால், அதை 2 அல்லது 3 நாட்களுக்குள் வசூல் செய்து கொடுத்து விடுகிறார். அதன் பின்னர் வரும் வசூல் எல்லாம் தான் தயாரிப்பாளர்கள், தியேட்டர் ஓனர்கள், விநியோகஸ்தர்கள் என பிரித்துக் கொள்கின்றனர்.

ஜன நாயகன் படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் உலகளவில் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் ஆரம்பித்து விட்டது. இதுவரை அட்வான்ஸ் புக்கிங்கே அனல் பறந்துக் கொண்டிருக்கிறது என்றும் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டில் டிக்கெட் புக்கிங் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Did Parasakthi beat Jana Nayagan first day box office at its lifetime running

மேலும், ஜன நாயகன் படத்தின் டிரைலர் ரிலீஸ் வரும் ஜனவரி 3ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், படத்துக்கான ஓபனிங் வசூல் எவ்வளவு வரும், இதுவரை அட்வான்ஸ் புக்கிங் மூலம் வசூல் ஆகியிருக்கும் தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

15 கோடி ரூபாய்: சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் முதல் நாள் வசூல் 15 கோடி வருமா என்பதே சந்தேகம் தான் என பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், ஜன நாயகன் படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் இப்போதே 15 கோடி ரூபாய் வசூலை உலகளவில் கடந்துள்ளதாக சாக்னிக் உள்ளிட்ட பாக்ஸ் ஆபீஸ் கணிப்பு தளங்கள் அறிவித்துள்ளன. இந்தியாவில் மட்டும் இதுவரை 3 கோடி ரூபாய் வசூலை ஜன நாயகன் ஈட்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Did Parasakthi beat Jana Nayagan first day box office at its lifetime running

சன் டே சம்பவம்: வரும் ஞாயிற்றுக்கிழமை ஜன நாயகன் டிக்கெட் புக்கிங் தொடங்கினால் பொங்கல் விடுமுறை நாட்கள் வரை அதிகளவிலான தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடியோ வெளியீட்டு விழாவுக்கே 80 ஆயிரம் பேர் மலேசியாவை டிராபிக் ஜாம் ஆக்கிய நிலையில், புக் மை ஷோ, டிஸ்ட்ரிக்ட் ஆப் என அனைத்து சர்வர்களும் சன் டே ஜாம் ஆகப்போவது உறுதி என்கின்றனர். இது தவிர ஏற்கனவே பெரிய நிறுவனங்கள் எல்லாம் பல்க் புக்கிங் ஆர்டர்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டமாக சென்று தளபதி விஜய்யின் கடைசி படத்தை பார்க்க பக்கா பிளான் போட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் கர்நாடகாவில் பெரிய கலெக்‌ஷனை அள்ளும் முடிவுடன் இருப்பதாகவும் டிக்கெட் விலை 1500 ரூபாய் அளவுக்கு இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

ஜன நாயகன் முதல் நாள் வசூல்: வட அமெரிக்காவில் இப்போதே ஜன நாயகன் அட்வான்ஸ் புக்கிங் வசூல் தி ராஜசாப் படத்தின் வசூலை விட முந்தியுள்ளதாக கிறிஸ்டோபர் கனகராஜ் ட்வீட் போட்டுள்ளார். சுமார் 475 காட்சிகளில் 400K அமெரிக்க டாலர்களை ஜன நாயகன் வசூல் செய்துள்ளது என்றும் 1045 ஷோக்களில் 342K டாலர்கள் வசூல் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். லியோ படத்தின் முதல் நாள் வ்சூல் 148 கோடி ரூபாயாக இருந்த நிலையில், ஜன நாயகன் படத்தின் முதல் நாள் வசூல் உலகளவில் சுமார் 120 கோடியாவது வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பராசக்தி லைஃப் டைம்: விஜய்யின் ஜன நாயகன் படத்துடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் மோதவுள்ள நிலையில், அந்த படம் ரசிகர்களை கவர்ந்து விட்டால் கண்டிப்பாக 150 கோடி முதல் அதிகபட்சம் 200 கோடி வரை ஈட்டும் என்றே பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த ஆண்டு வெளியான மதராஸி திரைப்படம் 100 கோடி வசூலை மட்டுமே எட்டிய நிலையில், பராசக்தி கொஞ்சம் டல் அடித்தாலும் பாக்ஸ் ஆபீஸில் பெரிய பின்னடைவை சந்திக்கும் என்கின்றனர். ஜனவரி 9 மற்றும் ஜனவரி 10ம் தேதி தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் ஆளுமை தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X