மே 30ம் தேதி என்ன தான் நடந்தது: நடிகை ப்ரீத்தி, நெஸ் சண்டையை நேரில் பார்த்தவர் விளக்கம்
மும்பை: மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நடிகை ப்ரீத்தி ஜிந்தா மற்றும் அவரது முன்னாள் காதலரான நெஸ் வாடியா இடையே என்ன நடந்தது என்பதை சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் விவரித்துள்ளார்.
கடந்த மே மாதம் 30ம் தேதி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டி நடந்த போது தனது முன்னாள் காதலரான நெஸ் வாடியா தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி, கண்ட இடத்தில் தொட்டதாக பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா போலீசில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில்,

நெஸ்
இரவு 8 மணிக்கு மேல் நெஸ் வாடியா ஸ்டேடியத்திற்கு வந்தார். அப்போது விஐபி பகுதியில் அவர் முன்பதிவு செய்த இருக்கைகளில் ஒன்று கூட காலியாக இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் பஞ்சாப் அணி அதிகாரி மற்றும் ஐபிஎல் ஏற்பாட்டாளர்களை அழைத்து கேட்டார்.

அம்மா
நெஸ்ஸின் அம்மா அதற்குள் அங்கு வந்துவிட்டார். இருக்கை இல்லாததால் அவர் நின்று கொண்டிருக்க வேண்டியதாகிவிட்டது. 20 நிமிடங்கள் கழித்து 2 இருக்கைகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும் ஒரு இருக்கை பின்னர் ஒதுக்கப்பட்டது.

ப்ரீத்தி
நெஸ் மற்றும் அவரது குடும்பத்தார் வருவார்கள் என்று பஞ்சாப் அணி அதிகாரிகள் ப்ரீத்தியிடம் கூறியும் அவர் அனைத்து இருக்கைகளிலும் தன்னுடன் வந்தவர்களை அமர வைத்தார்.

கையை பிடித்து
கூட்டம் அதிகமாக இருந்தது மேலும் சத்தமாக வேறு இருந்ததால் நெஸ் ப்ரீத்தியின் அருகில் சென்று அவரது கையை பிடித்து காதில் பேசினார்.

லேட்
ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று நெஸ் கேட்டதற்கு லேட்டாக வந்தால் நான் என்ன செய்ய முடியும் என்று ப்ரீத்தி தெரிவித்தார். என் அம்மாவுக்கு வயது 71 ஆகிறது. அவரை 20 நிமிடங்கள் நிற்க வைத்துள்ளீர்கள். இதில் இருந்து உங்களின் நிஜமான குணம் தெரிகிறது என்று நெஸ் ப்ரீத்தியிடம் தெரிவித்தார்.

அப்படி பேசாதே
என்ன தைரியம் இருந்தால் இப்படி என்னிடம் பேசுவீர்கள் என்று கேட்ட ப்ரீத்தி 'எப்' வார்த்தையை பயன்படுத்தினார். இதை அடுத்து நெஸ் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.


Click it and Unblock the Notifications











