Project K: இதுக்குத்தான் இவ்ளோ பில்டப்பா.. தீபிகா படுகோன் ஃபர்ஸ்ட் லுக்கே இந்த படத்தின் காப்பியா?
சென்னை: கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் படத்தை இயக்கிய இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்தின் தீபிகா படுகோன் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் வெளியிடவே இல்லை.
இந்நிலையில், இன்று காலை தீபிகா படுகோனின் ஃபர்ஸ்ட் லுக்கை வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த போட்டோவை பார்த்தால் ஒன்றும் புதிதாகவோ பிரம்மாண்டமாகவோ வித்தியாசமாகவோ கூட இல்லை. இந்நிலையில், தீபிகா படுகோனை இப்படி காட்ட இப்படியொரு பில்டப்பா என கலாய்த்து வருகின்றனர்.
பதான் படத்தில்: இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான ஷாருக்கானின் பதான் படத்தில் தீபிகா படுகோனின் அந்த பிகினி லுக் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. பெஷாராம் பாடல் வெளியான உடன் தீபிகா படுகோனின் ஹாட்னஸை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆடிப் போனார்கள்.

காவி நிற பிகினி அணிந்து கொண்டு தீபிகா படுகோன் குலுங்க குலுங்க நடனம் போட்ட காட்சிகள் பெரும் சர்ச்சையாக வெடித்தன. ஆனால், அந்த பாடல் தான் பதான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ஓபனிங்கிற்கே பலமாக அமைந்தது.
தீபிகா படுகோன் ஃபர்ஸ்ட் லுக்: ப்ராஜெக்ட் கே படத்தில் இதுவரை பிரபாஸின் ஒரு கை போஸ்டரை மட்டும் காட்டிய நிலையில், தீபிகா படுகோனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ரசிகர்கள் வெகுநேரம் காத்திருந்த நிலையில், அந்த புகைப்படம் டெக்னிக்கல் பிரச்சனை காரணமாக வெளியாகவில்லை என வைஜெயந்தி மூவீஸ் அறிவித்தது.

இந்நிலையில், ஷார்ப்பான கண்களுடன் தீபிகா படுகோன் பார்க்கும் ஒரு சாதாரண லுக்கை வெளியிட்டு இதுதான் ஃபர்ஸ்ட் லுக் என ப்ராஜெக்ட் கே படக்குழு வெளியிட ரசிகர்கள் பயங்கர கடுப்பாகி விட்டனர்.
டூன் காப்பி: ஹாலிவுட்டில் வெளியான டூன் படத்தின் அப்பட்டமான காப்பியா ப்ராஜெக்ட் கே என்றும் தீபிகா படுகோன் ஃபர்ஸ்ட் லுக் அப்படியே டூன் படத்தின் நாயகி ஜெண்டயா லுக் போலவே இருக்கே என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்த லுக்கில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை, தீபிகா படுகோன் சிம்பிளாக எப்போதும் போலத்தான் போஸ் கொடுத்து இருக்கிறார் என ட்ரோல்கள் பறக்கின்றன.



Click it and Unblock the Notifications











