"வாத்தி கம்மிங்.. வாத்தி கம்மிங்".. கால் உடைஞ்சு போச்சே.. ஆனால் அது "இவர்" இல்லையாம்!
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இந்நிகழ்ச்சியில் இவர் செய்யும் குறும்பான வேலைகள் ரசிகர்கள், நடுவர்கள் மற்றும் போட்டியாளர்களை மிகவும் கவர்ந்தது.

தற்போது சில படங்களிலும் வாய்ப்பு கிடைத்து, புகழ் நடித்து வருகிறார். நடிகர் விஜய் சேதுபதியுடன் கைக்கில் செலவதை போன்ற புகழின் போட்டோக்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.
சமீபத்தில், விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடிய போது, புகழ் தவறி விழுந்தது போன் வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவியது. இதனால் புகழுக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதன் உண்மை தன்மை குறித்து விசாரித்த போது, அந்த வீடியோவில் தவறி விழுந்தது புகழ் இல்லை என தெரிய வந்துள்ளது. கேரளாவை சேர்ந்த ஒருவர் தன்னை போலவே ஹேர் ஸ்டைல் வைத்திருந்ததால், இந்த குழப்பம் ஏற்பட்டதாக புகழ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











