இறுதிக்கட்டத்தில் தனுஷின் டி 43... ராதிகாவும் நடிக்கிறாரா ?
ஐதராபாத் : தனுஷ் நடிக்கும் டி 43 படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் சமீபத்தில் துவங்கி நடந்து வருகிறது. கார்த்திக் நரேன் இயக்கும் இந்த படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வழக்கம் போல இந்த படத்திற்கும் பாடல் வரிகளை தனுஷ் தான் எழுதுகிறார். சில பாடல்களை அவரே பாடி உள்ளார்.

டி 43 லிருந்து விலகினாரா கார்த்திக் நரேன்
இதற்கிடையில் சமீபத்தில் கார்த்திக் நரேன் ஒருநாள் ஷுட்டிங்கிற்கு வராததால், இந்த படத்தை டைரக்டர் சுப்ரமணியம் சிவாவை வைத்து தனுஷே இயக்க போகிறார். அதனால் கார்த்திக் நரேன் படத்தில் இருந்து விலகியதாக தகவல் பரவியது.

பத்திரிக்கையாளராக தனுஷ்
பிறகு விசாரித்ததில் அப்படி எதுவும் இல்லையாம். கார்த்திக் நரேன் தான் டி 43 படத்தை இயக்குகிறாராம். இந்த படத்தில் தனுஷும், மாளவிகாவும் பத்திரிக்கையாளர்களாக நடிக்கிறார்களாம்.

ராதிகா பகிர்ந்த ஃபோட்டோ
எமோஷன், ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் டி 43 படத்தில் மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்நிலையில் ஐதராபாத்தில் தனுஷ், ராதிகா இணைந்து எடுத்துக் கொண்ட ஃபோட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் ராதிகா.

டி 43 ல் நடிக்கிறாரா ராதிகா
இதனால் இந்த படத்தில் ராதிகாவும் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே தங்கமகன் படத்தில் தனுஷிற்கு அம்மாவாக ராதிகா நடித்திருந்தார். அதனால் இந்த படத்திலும் அம்மா சென்டிமென்ட் இருக்கலாம், அந்த கேரக்டரில் ராதிகா நடிக்கலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











