Don't Miss!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆஹா சூப்பர்...அண்ணாத்த, வலிமை ஒரே நாளில் ரிலீசா?...அப்போ இந்த ஆண்டு தல தீபாவளி தான்
சென்னை : படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்றால் அது நம்ம தல அஜித்தின் வலிமை படம் தான். 2019 ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த படத்திற்கு பூஜை போடப்பட்டது.
OTT னா என்ன? வெகுளியாக கேட்ட மீனாட்சி சர்காரின் திருமண தகவல்
அன்று முதல் தற்போது வரை சோஷியல் மீடியாக்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது வலிமை படம். அஜித் ரசிகர்களும் தொடர்ந்து அப்டேட் கேட்டு வந்தனர். ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு தொடர்ந்து தள்ளி போடப்பட்டு வந்தது.
சாதனை படைத்த மோஷன் போஸ்டர்
ஒருவழியாக படம் துவங்கப்பட்டு 700 நாட்களுக்கு பிறகு படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபஸ்ட்லுக் போஸ்டர்கள் ஜுலை 11 அன்று வெளியிடப்பட்டன. இந்த மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்ட 48 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளை பெற்று, புதிய சாதனை படைத்தது.
கொண்டாடிய தல ரசிகர்கள்
யுவன் சங்கர் ராஜாவின் மிரட்டும் தீம் பிஜிஎம் மியூசிக்குடன் மாஸாக வெளியான மோஷன் போஸ்டரை அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். பிரபலங்கள் பலரும் பாராட்டி தள்ளினர். தொடர்ந்து அஜித்தின் மேலும் இரண்டு ஸ்டையிலான ஸ்டில்கள் வெளியிடப்பட்டன.
தீபாவளிக்கு வலிமை ரிலீசா
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக வலிமை படத்தை தீபாவளி நாளான நவம்பர் 4 அன்று ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளதாக ஏற்கனவே படக்குழு அறிவித்து விட்டது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
வியாழக்கிழமை சென்டிமென்ட்
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படமும் நவம்பர் 4 ம் தேதி தான் ரிலீஸ் ஆக உள்ளதாக சமீபத்தில் வெளியிடப்பட்ட ஃபஸ்ட்லுக் போஸ்டரிலேயே அறிவித்திருந்தனர். அஜித்திற்கு ராசியான வியாழக்கிழமையில் நவம்பர் 4 வருவதால் அன்றைய தினம் வலிமை ரிலீசாக அதிக வாய்ப்புக்கள் உள்ளது.
வியாழக்கிழமைக்கு மாறிய ரஜினி
இதே போன்று ரஜினி கடைசியாக நடித்த தர்பார் படம் வியாழக்கிழமையில் தான் ரிலீஸ் செய்யப்பட்டது. அதனால் அண்ணாத்த படத்தையும் வியாழக்கிழமையில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இரண்டு டாப் ஸ்டார்களின் படங்களும் தீபாவளி அன்றே ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் தியேட்டர் உரிமையாளர்களிடையே புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.
பீஸ்ட்டும் வருதா
இன்னும் 3 மாத அவகாசம் உள்ளதால் விஜய்யின் பீஸ்ட் படமும் அதற்குள் ரிலீசுக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள் என்பதால் தியேட்டரில் பார்க்வே ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.