மனைவியுடன் எந்தப் படம் பார்த்தார் ரஜினிகாந்த்.. ? திடீரென வைரலான போட்டோ!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் தியேட்டரில் பிகில் படம் பார்த்ததாக ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டு விட்டது ஒரு குரூப். ஆனால் ரஜினி பார்த்த படம் வேறாம்.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான படம் பிகில். இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு கடந்த 25ஆம் தேதி வெளியானது.

தொடக்கத்தில் விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடினாலும் எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்ற விமர்சனமே எழுந்தது. ஆனால் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை என கூறப்படுகிறது.

 ரூ. 200 கோடி வசூல்

ரூ. 200 கோடி வசூல்

பிகில் படத்தால் யாருக்கும் நஷ்டமில்லை. லாபத்தைதான் பார்த்திருப்பதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் பிகில் படம் 200 கோடி ரூபாய் வரை குவித்திருப்பதாக தகவல் பரவியது.

ரஜினி தனது மனைவியுடன்

இந்நிலையில் பிகில் படத்தை நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் தியேட்டரில் பார்த்ததாக ஒரு வதந்தி படு வேகமாக பரவியது. இதுதொடர்பான ஒரு புகைப்படத்தையும் விஜய் ரசிகர்கள் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கினர்.

 சகலையோட படம்

சகலையோட படம்

இது உண்மையா என்று பலரும் விசாரணையில் இறங்கினர். நாமும் உள்ளே இறங்கி விசாரித்துப் பார்த்தோம்.. அதில் நமக்குக் கிடைத்த தகவல் இதுதான்.. ரஜினி தனது மனைவியுடன் சேர்ந்து பார்த்த படம் பிகில் இல்லையாம். தனது சகலையான ஒய்.ஜி மகேந்திரன் நடித்த மலையாளத் திரைப்படம் ஒன்றை தனது மனைவியுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள 4 ஃபிரேம்ஸ் திரையரங்கில் பார்த்துள்ளார் ரஜினி.

 நல்ல கிளப்புறாங்கய்யா..

நல்ல கிளப்புறாங்கய்யா..

இந்த தகவலை அறிந்த நெட்டிசன்ஸ், அட போங்கப்பா.. நாங்க கூட ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்து போயிட்டோம்னு புலம்பியபடி அடுத்த வேலைக்குக் கிளம்பி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X