அம்பானி வீட்டு திருமணம்.. ராம் சரண் பணம் பெற்றாரா? டென்ஷனான டோலிவுட்!

சென்னை: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் ஜாம்நகரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் எக்கச்சக்கமான பிரபலங்களும், தொழிலதிபர்களும், வெளிநாட்டு பாடகர்களும் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வில், ராம் சரண், ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அமீர் கான் அனைவரும் நடனமாடினார்கள். இதில் நடனமாடுவதற்கு ராம் சரண் பணம் பெற்றதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது.

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12ந் தேதி நடைபெற உள்ள நிலையில், திருமணத்திற்கான முந்தைய கொண்டாட்டம் ஜாம்நகரில் மார்ச் 1ந் தேதியில் இருந்து மார்ச் 3ந் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக 1000 ஏக்கர் பரப்பளவில் காடுகள் சரிசெய்யப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. மேலும், ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் வந்தாரா என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கியது. இந்த இடத்தில் தான், ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது.

Did Ram Charan get paid to dance at Ambani house wedding

பிரம்மாண்ட ஏற்பாடு: விஜபிக்கள் அனைவரும் பங்கு ஏற்பதற்கு வசதியாக, ஜாம்நகரின் விமான நிலையம் 10 நாட்களுக்கு மட்டும் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டு, தினமும் 140 விமானங்கள் ஜாம்நகரில் வந்திறங்கின. மூன்று நாள் நடைபெற்ற இந்த ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில், வெள்ளிக்கிழமை காக்டெயில் பார்ட்டி நடைபெற்றது. அமெரிக்க பாப் பாடகியும் நடிகையுமான ரிஹானாவின் இசைக்கச்சேரி நடைபெற்றது. இந்த இசை கச்சேரிக்காக மட்டும் அவருக்கு ரூ.75 கோடி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆட்டம் போட்ட ராம் சரண்: இந்த நிகழ்ச்சியில் ராம் சரண் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாலிவுட்டின் மாஸ் நட்சத்திரங்களான ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் மூன்று பேரும் சேர்ந்து ஆர்ஆர்ஆர் படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினார். அப்போது, ஷாருக்கான் இந்த படத்தின் ஹீரோவே இங்க இருக்கிறார் என்று ராம் சரணை அழைத்தார். இதையடுத்து, மூன்று கானுடன் சேர்ந்து ராம் சரண் நடனமாடினார்.

பணம் பெற்றாரா? இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சிலர் ராம் சரண் அம்பானி வீட்டு கல்யாணத்தில் நடனமாடுவதற்கு பணத்தை பெற்றார் என்று செய்தி பரவியது. பாலிவுட் நடிகர்கள் சல்மான், அமீர், ஷாருக்கான் ஆகியோர் நிகழ்ச்சியில் நடனமாட பணம் பெற்றதாகவும், ராம் சரண் அதைப் பின்பற்றியதாகவும் செய்தி பரவியது. இதனால், கடுப்பான டோலிவுட் வாசிகள், பாலிவுட் நட்சத்திரங்கள் ஆடியது போல அவர் முழுவதுமாக நடனமாடவில்லை. ஷாருக்கான் அழைத்ததால் சென்று நடனமாடினார். பாலிவுட்டில் பணம் செலுத்தி நடனமாடும் பழக்கம் இருக்கிறது. ஆனால் டோலிவுட்டில் குறிப்பாக ராம் சரண் போன்ற ஒரு பிரபலத்திற்கு அவசியம் இல்லை என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X