ராமராஜன் குடும்ப பிரச்னை.. அழுதுகொண்டே இருந்தேன்.. சேது பட நடிகை ஓபன் டாக்

சென்னை: கோலிவுட்டில் 80களில் முன்னணி நடிகராக ஜொலித்தவர் ராமராஜன். அவரது வளர்ச்சி அப்போது பீக்கில் இருந்த ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோருக்கு பெரிய அச்சத்தை கொடுத்தது. கண்டிப்பாக பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென அவர் வீழ்ச்சியடைந்தார். அது அனைவருக்கும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சூழல் இப்படி இருக்கு பல வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர்; சாமானியன் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகிய இரண்டு பேரும் எழுதியிருக்கும் அத்தியாயத்தை எப்போதும், யாராலும் அழிக்க முடியாததுதான். சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை அவர்களை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. குறிப்பாக 80கள், 90களில் அவர்கள் புகழின் உச்சியில் இருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் போட்டியாக பலர் வந்தாலும் சிலர் மட்டும்தான் மக்கள் மனதில் இடம்பிடித்தார்கள். அந்த சிலரில் ஒருவர்தான் ராமராஜன்.

செம ரவுண்டு வந்த ராமராஜன்: ராமராஜனின் திரையுலக வாழ்க்கையை புரட்டிப்போட்ட படம் என்றால் அது கரகாட்டக்காரன். கங்கை அமரன் இயக்கியிருந்த அந்தப் படம் தில்லானா மோகனாம்பாள் ஜானரில்தான் உருவாகியிருந்தது. கிராமங்கள் பக்கம் கொண்டாடப்படும் கரகாட்டத்தை கதையின் கருவாக வைத்து; ஹீரோ, ஹீரோயினை கரகாட்ட கலைஞர்களாக காண்பித்திருந்ததால் படம் மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி எவர்க்ரீன் காமெடி காம்போவான கவுண்டமணி - செந்திலும் தங்களால் முடிந்த அளவுக்கு மைலேஜை அப்படத்துக்கு கொடுத்திருந்தார்கள்.

Did Ramarajan Plan to Marry Abitha Actress Reacts to Old Rumours
Photo Credit:

ராமராஜனின் ராஜ்ஜியத்தில்: அந்தப் படத்திலிருந்து ராமராஜனின் ராஜ்ஜியம் தமிழ் சினிமாவில் வளர்ந்தது. கரகாட்டக்காரன் கொடுத்த மவுசால் ராமராஜனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. அந்தப் படங்களும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஹிட்டாகத்தான் அமைந்தன. முக்கியமாக கிராமங்கள் பக்கம் ராமராஜனுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

ராமராஜன் கொடுத்த ரீ என்ட்ரி: ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்த கே.எஸ்.ரவிக்குமார், 'ராமராஜனின் வளர்ச்சியை பார்த்து ரஜினிகாந்த் அஞ்சினார்' என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. தொடர்ந்து பீக்கில் இருந்த அவர்; நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை சில பிரச்னைகளை சந்தித்தது. அதற்கு காரணம் ஜாதகம்தான் என்று சொல்லப்பட்டாலும்; இன்னொரு தரப்பினரோ சேது பட நடிகை அபிதாவை கனெக்ட் செய்து பேசினார்கள்.

அபிதாவின் பேட்டி: இந்நிலையில் பல வருடங்கள் கழித்து அந்த கிசுகிசு பற்றி மௌனம் கலைத்திருக்கிறார் அபிதா. தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "ராமராஜன் என்னைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறார். அதனால்தான் அவருக்கும், நளினிக்கும் விவாகரத்து என்றெல்லாம் சொன்னார்கள். அதை கேட்டு ரொம்ப ஃபீல் செய்து அழுதுகொண்டிருந்தேன். அந்த சமயத்தில் எனது குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். ஆரம்பத்தில் ரொம்ப அழுவேன். காலம் போகப்போக சரி இப்படி பேசுவதும் அவர்களுக்கு ஒரு வேலை என்று சொல்லி விட்டுவிடுவேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X