Leo: என்ன சொல்றீங்க.. விஜய்யின் லியோ படத்தில் ராம் சரண் கேமியோவா?.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்து விட்டு ஏகப்பட்ட ஹாலிவுட் இயக்குநர்களே அடுத்த ஜேம்ஸ் பாண்டாகவே ராம் சரணைநடிக்க வைக்கலாமா என பேசிக் கொண்டிருக்கும் நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் ராம் சரண் கேமியோ ரோலில் நடிக்கப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலி கான் என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்து வரும் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகிறது.

கமல்ஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் கிளைமேக்ஸில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் அதிரடி கேமியோவாக வந்து மாஸ் காட்டிய நிலையில், லியோ படத்திலும் சஸ்பென்ஸ் கேமியோ இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Did Ramcharan doing a cameo in Vijays Leo?

இந்தி மார்க்கெட்டை பிடிக்க: கன்னட திரைப்படமான கேஜிஎஃப் 2 படத்தை பாலிவுட்டில் மிகப்பெரிய வசூல் சாதனை படமாக மாற்ற பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக களமிறக்கப்பட்டார்.

கேஜிஎஃப் 2 பீஸ்ட்டுக்கு போட்டியாக தமிழ்நாட்டிலும் சக்கைப் போடு போட்டதை பார்த்த நடிகர் விஜய் லியோ படத்திற்கு வில்லனாக சஞ்சய் தத்தையே புக் செய்துள்ளார் என்கின்றனர். இந்தி மார்க்கெட்டிலும் இதுவரை விஜய் படங்கள் பெரியளவிலான பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெறாத நிலையில், சஞ்சய் தத் அதற்கு உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராம்சரண் கேமியோ: டோலிவுட் மார்க்கெட்டை பிடிக்க தெலுங்கு இயக்குநர் படத்திலேயே வாரிசு படத்தில் நடித்தாலும், அந்த படமும் எதிர்பார்த்த வரவேற்பை விஜய்க்கு கொடுக்கவில்லை. கேரளாவில் ஓடும் அளவுக்கு தமிழ்நாட்டைத் தாண்டி எங்கேயும் வசூல் குவிவதில்லை.

இந்நிலையில், லியோ படத்தில் ராம்சரண் கேமியோவாக நடித்தால் டோலிவுட்டிலும் பாக்ஸ் ஆபிஸை அள்ளலாம் என்கிற ரீதியில் ராம்சரண் இந்த படத்தில் கேமியோவாக நடிக்கப் போகிறாரா? என்கிற தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது.

வாய்ப்பில்லை ராஜா: ஆனால், ராம்சரண் லியோ படத்தில் கேமியோவாக நடிக்கவில்லை என்றும் அது வெறும் வதந்தி தான் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், லியோ படத்தில் சர்ப்ரைஸ் கேமியோ நிச்சயமாக இருக்கும் என்றும் அனைவரும் நம்புகின்றனர்.

எப்படி இருந்தாலும், கத்தரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வரத்தானே போகுது என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏற்கனவே சல்மான் கான், பூஜா ஹெக்டே நடித்த வீரம் இந்தி ரீமேக் படமான கிஸி கா பாய் கிஸி கா ஜான் படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு வேட்டிக் கட்டிக் கொண்டு நடனம் போட்டிருந்தார் ராம்சரண். ஆனால், ராம்சரணின் கேமியோ கூட அந்த படத்தை காப்பாற்றவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X