Leo Success Meet: காக்கா கழுகு கதைக்கு குட்டி ஸ்டோரி சொன்ன ரத்னகுமார்.. அரங்கமே சும்மா அதிருது!

சென்னை: ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கழுகு vs காக்கா கதை சொன்னது பெரும் சர்ச்சையை கிளப்பியது. நடிகர் விஜய்யை தான் காக்கா என ரஜினிகாந்த் சொன்னாரா என ஏகப்பட்ட விவாதங்களும் ட்ரோல்களும் கிளம்பின.

Did Rathnakumar indirectly attacks Rajinikanth with his Kutty Story at Leo Success Meet?

லியோ ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் குட்டி ஸ்டோரி மூலம் அதற்கு பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஆடியோ லான்ச்சே நடைபெறவில்லை.

இந்நிலையில், ரத்னகுமார் தற்போது லியோ வெற்றி விழாவில் அதற்கு பதிலளிக்கும் விதமாக ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி அரங்கத்தை அதிர வைத்துள்ளது.

கூல் சுரேஷ் மோடில் ரத்னகுமார்: லியோ படத்தின் புரமோஷனுக்காக ஒரு பக்கம் லோகேஷ் கனகராஜ் பேட்டி கொடுத்து வந்த நிலையில், மறுமுனையில் ரத்னகுமார் ஏகப்பட்ட பேட்டிகளை கொடுத்து படத்தை புரமோட் செய்தார். மேலும், நடிகர் விஜய்க்கு எதிராக யாராவது ட்வீட் போட்டால் கூட ரத்னகுமார் இறங்கி தரமான சம்பவத்தை செய்து வருகிறார். ரத்னகுமார் தான் லியோ படத்தின் இரண்டாம் பாகத்தையே இயக்கினார் என்றெல்லாம் ரஜினி ரசிகர்கள் கிளப்பி விட்டு பஞ்சாயத்து பண்ணது தனிக்கதை.

உயர பறந்தாலும்: லியோ வெற்றி விழாவில் பேசிய ரத்னகுமார் தனக்கு சினிமா ஆசை வர காரணமே தளபதி விஜய் தான் என்றும், நாம எவ்ளோ உயர பறந்தாலும் பசிச்சா கீழ வந்து தான் ஆகணும் என பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரத்னகுமார் அப்படி பேசியதும் ஒட்டுமொத்த அரங்கமே அதிர்ந்து கரவொலிகளை எழுப்பியதாக உள்ளே இருந்து பலர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Did Rathnakumar indirectly attacks Rajinikanth with his Kutty Story at Leo Success Meet?

ரஜினிக்கு பதிலடி: ஜெயிலர் ஆடியோ லான்ச்சில் நடிகர் ரஜினிகாந்த் எவ்வளவு தான் காக்கா உயர பறந்தாலும், கழுகு அதை விட உயரத்தில் பறந்து செல்லும் என பேசியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதற்கு நடிகர் விஜய்க்கு பதிலாக ரத்னகுமார் பதிலடி கொடுத்துள்ளார் என விஜய் ரசிகர்கள் ரஜினி ரசிகர்களை ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X