மாஸ்டர் படத்தில் பூனை.. லியோ படத்தில் இந்த விலங்கா? லியோ அப்டேட்களை லீக் செய்கிறாரா ரத்னகுமார்?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தின் ரகசியங்களை சீக்ரெட்டாக ரிவீல் செய்து வருகிறாரா இயக்குநர் ரத்னகுமார் என்கிற கேள்வியை அவரது லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த விஜய் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
மேயாத மான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார் ஆடை, குலுகுலு உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் மாஸ்டர், விக்ரம் படங்களை தொடர்ந்து லியோ படத்திலும் வசனகர்த்தாவாக பணியாற்றி வருகிறார்.

அப்டேட் கிங்
மேயாத மான், ஆடை மற்றும் குலுகுலு படங்களை இயக்கிய ரத்னகுமார் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களில் அவருக்கு உறுதுணையாக பணியாற்றி வருகிறார். மாஸ்டர் படம் உருவாகி வரும் போது அதிகப்படியான அப்டேட்களை கொடுத்து வந்த ரத்னகுமாரை விஜய் ரசிகர்கள் அப்டேட் கிங் என்றே கொண்டாடி வருகின்றனர்.

காஷ்மீரில் ரத்னகுமார்
லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், இயக்குநர் ரத்னகுமாரும் அந்த படத்தின் பணிகளுக்காக அங்கே சென்றுள்ளார். காஷ்மீரில் அவர் எடுக்கும் சில புகைப்படங்களை ட்விஸ்ட் கொடுக்கும் கேப்ஷன்களை பதிவிட்டு அவர் வெளியிட்டு வருவதை பார்த்த விஜய் ரசிகர்கள் இதெல்லாம் அவர் நமக்கு தரும் டிப்ஸ் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

சந்தானம் கண்ணாடி
சமீபத்தில், உடைந்த ஒரே ஒரு கூலிங் கிளாஸ் கண்ணாடியை கையில் வைத்துக் கொண்டு பனிமலை பேக்கிரவுண்டில் நின்றபடி ரத்னகுமார் கொடுத்த போஸை பார்த்த ரசிகர்கள் விக்ரம் படத்தில் சந்தானமாக நடித்த விஜய்சேதுபதி சாகவில்லை என்றும் லியோ படத்தில் அவர் இடம்பெற்றால், இது விக்ரமுக்கு முந்தைய கதையா எல்சியூ தானா அப்போ என எதிர்பார்ப்புகளை எகிற விட்டனர்.

மாஸ்டரில் பூனை
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தில் பூனைக் குட்டியை விஜய் கையில் வைத்திருக்கும் படி எடுத்திருந்தார். ஆரம்பத்தில் அந்த பூனைக்குட்டிக்கு ஏகப்பட்ட தனிக்கதைகள் சொல்லப்பட்டன. ஆனால், மாஸ்டர் படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் அந்த பூனைக்குட்டி சீன் இடம்பெற்றிருக்கும்.

நாய்க்குட்டி உடன்
இந்நிலையில், ரத்னகுமார் லேட்டஸ்ட்டாக ஹைபிரிட் நாய்க்குட்டி ஒன்றுடன் எடுத்த போட்டோவை போட்டுள்ள நிலையில், கண்டிப்பாக லியோ படத்தில் அந்த நாய்க்குட்டி நடித்திருப்பது கன்ஃபார்ம் என ரசிகர்கள் ரத்னகுமாரிடமே விளக்கம் கேட்டு வருகின்றனர். ஆனால், படம் வரும் வரை எல்லாவற்றையும் சஸ்பென்ஸாகவே வைத்து ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்வார் ரத்னகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications