அடிமேல் அடிவாங்கும் ஆர்ஜே பாலாஜி.. அந்த படம் அவ்வளவு தானா?.. பீதியை கிளப்புறாங்களே!
சென்னை: சூர்யாவை வைத்து ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ள 'கருப்பு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் மாதத்துக்கு தள்ளிப்போகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்து வந்த ஒரு படம் அப்படியே கைவிடப்பட்டு விட்டதாக திடுக்கிடும் தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பரவி வருகின்றன.
ஆர்ஜேவாக தனது மீடியா வாழ்க்கையை துவங்கிய பாலாஜி காமெடி நடிகராகவும், ஹீரோவாகவும் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து தற்போது சூர்யாவையே இயக்கும் அளவுக்கு டாப் டைரக்டராகவும் முன்னேறியுள்ளார். தனது குடும்பத்தில் ஏகப்பட்ட கஷ்டங்கள் இருந்தாலும், அதையெல்லாம் தனது நகைச்சுவை திறன் மூலம் கடந்து ரசிகர்களையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து வருகிறார்.
ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜி, மூக்குத்தி அம்மன் படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. கருப்பு படத்தின் டீசரை பார்த்த சூர்யா ரசிகர்கள் இந்த ஆண்டு தீபாவளிக்கே படம் வெளியானால், பாக்ஸ் ஆபீஸில் பட்டாசாய் வெடிக்கும் என எதிர்பார்த்தனர்.

கருப்பு ரிலீஸ் தேதி சிக்கல்: கருப்பு படத்தின் டிஜிட்டல் உரிமம் இன்னமும் விற்பனையாகவில்லை என்றும் அதன் காரணமாகவே இந்த ஆண்டு கருப்பு படம் வெளியாகவில்லை என சில தகவல்கள் உலா வருகின்றன. வரும் பொங்கலுக்கு கருப்பு படம் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, அடுத்த மார்ச் மாதம் தான் படம் வெளியாகும் என பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. படக்குழு இதுவரை கருப்பு படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. நடிகர் சூர்யா வெங்கி அட்லூரி படத்தையும் அதனை தொடர்ந்து ஜித்து மாதவன் படத்தையுமே ஆரம்பித்துவிட்டார் என்பது கூடுதல் தகவல்.
நிராகரித்த விஜய்: சூர்யாவுக்கு முன்பாக விஜய்க்குத்தான் ஆர்ஜே பாலாஜி படம் பண்ண வேண்டிய சூழல் உருவாகி இருந்தது. அ. வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடிப்பதற்கு முன்னதாக அந்த வாய்ப்பை விஜய் ஆர்ஜே பாலாஜிக்கே கொடுத்தார். ஆனால், குறுகிய காலக்கட்டத்தில் ஆர்ஜே பாலாஜியால் விஜய் எதிர்பார்த்த கதையை ரெடி செய்ய முடியாத நிலையில், அந்த வாய்ப்பு அ. வினோத்துக்கு சென்றது. அதன் பின்னர், தான் சூர்யாவை இயக்கும் வாய்ப்பு ஆர்ஜே பாலாஜிக்கு கிடைத்தது எனக் கூறுகின்றனர்.

ஹேப்பி எண்டிங் படம் டிராப்பா?: கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் 'ஹேப்பி எண்டிங்' எனும் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி அந்த படத்தின் அறிவிப்பு வெளியானது. அறிமுக இயக்குநர் அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்த படம் செம காமெடி காக்டெயிலாக வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது, அந்த படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மில்லியன் டாலர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தை கைவிட்டு விட்டதாகவும், வேறு ஏதாவது தயாரிப்பு நிறுவனம் முன் வந்தால் தான் மீண்டும் அந்த படம் ஆரம்பிக்கும் எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











