கண்ணீர் விடுவீங்க.. அந்த பெண்ணாவது நல்லா இருக்கட்டும்.. சமந்தா தலைக்கேறிய கோபம்.. அப்படி சொன்னாரா?

சென்னை: நடிகர் நாக சைதன்யாவை அவரின் முன்னாள் மனைவி நடிகை சமந்தா கடுமையாக விமர்சனம் செய்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. காதலுக்கு மதிப்பளிக்காதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும் கண்ணீரில்தான் இருப்பார்கள். அதை தெரிந்து கொள்ள வேண்டும்குறைந்த பட்சம் அந்த பொண்ணாவது சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தனது முன்னாள் கணவரின் புது காதலி குறித்து சமந்தா கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு தற்போது சமந்தா விளக்கம் கொடுத்துள்ளார்.

நடிகை சமந்தா - நாக சைதன்யா இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரிந்தனர். இவர்கள் திருமணம் செய்து சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் திருமண உறவில் ஏற்பட்ட கசப்பு காரணமாக பிரிந்தனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகள், சமந்தா படங்களில் நடிப்பதால் நாக சைதன்யாவிற்கு வந்த கோபம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இவர்கள் இருவரும் பிரிந்தனர்.

பிரிவு

பிரிவு

இந்த நிலையில் சமந்தா நாக சைதன்யாவை பிரிந்த பின் வரிசையாக பல்வேறு படங்களில் நடிக்க தொடங்கினார். அவர் தனது கேரியரில் கவனம் செலுத்த தொடங்கினார், சினிமாவில் தீவிரமாக நடிக்க தொடங்கினார். இவரின் சாகுந்தலம் படம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இது போக தமிழிலும் இவர் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் சில படங்களில் நடிக்கவும் இவர் ஒப்பந்தம் ஆகி உள்ளார். சினிமாவில் இவர் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

நாக சைதன்யா

நாக சைதன்யா

இன்னொரு பக்கம் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபிலாவை டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் 1 படத்தில் சோபிதா நடித்து இருந்தார். இந்த படத்தில் அவரின் நடிப்பு பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் நாக சைதன்யா சோபிதா இருவரும் காதலிப்பதாக செய்திகள் வந்தன. இதையடுத்து சமந்தா இந்த விவகாரம் காரணமாக கோபம் அடைந்ததாக கூறப்பட்டது. அதாவது யார் யாருடன் காதலில் இருக்கிறார்கள், டேட்டிங் செய்கிறார்கள் என்று எனக்கு கவலை இல்லை.

கண்ணீர்

கண்ணீர்

காதல்தான் முக்கியம். காதலுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். ஆனால் காதலுக்கு மதிப்பளிக்காதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும் கண்ணீரில்தான் இருப்பார்கள். அதை தெரிந்து கொள்ள வேண்டும்குறைந்த பட்சம் அந்த பொண்ணாவது சந்தோஷமாக இருக்க வேண்டும். அந்த நபர் தன்னுடைய நடத்தையையும் பார்வையையும் மாற்றிக்கொண்டால் நல்லது. முக்கியமாக பெண்ணை காயப்படுத்தாமல் அவர் இருக்க வேண்டும். அதுதான் நல்லது, என்று கூறியதாக செய்திகள் வந்தன. அவர் இப்படி பேசியதாக வெளியான செய்திகள் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தின.

தெலுங்கு

தெலுங்கு

இந்த விவகாரம் தெலுங்கு சினிமா உலகில் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து சமந்தா இப்படி பேசி இருக்க கூடாது. அவர்கள் பிரிந்துவிட்டனர். அதன்பின் இந்த விஷயத்தை கிளற கூடாது. முக்கியமாக அவரின் கணவர் யாரை டேட்டிங் செய்தால் என்ன? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதையடுத்து தற்போது சமந்தா விளக்கம் கொடுத்துள்ளார். அதில் நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லை. இது முழுக்க பொய்யான செய்தி என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X