போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ள நடிகை சஞ்சனா கல்ராணி மதம் மாறினாரா? வைரலாகும் டாக்குமென்ட்!

By

பெங்களூரு: போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ள நடிகை சஞ்சனா கல்ராணி, மதம் மாறியதாகவும் தனது பெயரை மாற்றிக்கொண்டதாகவும் டாக்குமென்ட் ஒன்று வைரலாகி வருகிறது.

Recommended Video

Jayam Ravi நடிகைக்கு நீடிக்கும் Jail வாழ்க்கை • Radhika dwivedi

கன்னட சினிமா துறையில் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது

போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராகிணி திவேதி

ராகிணி திவேதி

இந்த வழக்கில் பிரபல கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, அவர்களுடைய நண்பர்கள் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராகிணி தமிழில் நிமிர்ந்து நில் என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஆண்ட்ரிதா ராய்

ஆண்ட்ரிதா ராய்

கன்னட நடிகையான ஆண்ட்ரிதா ராய், அவர் கணவரும் நடிகருமான திகாந்த் ஆகியோரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அவர்களிடம் நான்கு மணி நேரம் போலீசார் விசாரித்தனர். அவர்கள், தாங்கள் பார்ட்டிகளுக்கு சென்றது உண்மை என்றும் ஆனால் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளனர்.

திருமண புகைப்படம்

திருமண புகைப்படம்

இந்நிலையில், நடிகை சஞ்சனா கல்ராணி, டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாயின. அவர் டாக்டர் அஜீஸ் பாஷா என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. அவர்கள் இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படமும் வைரலாயின.

திருமணம் ஆகவில்லை

திருமணம் ஆகவில்லை

சஞ்சனா கல்ராணியும், அஜீஸ் பாஷாவும் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்ததாகவும் கூறப்பட்டது. இதை சஞ்சனா கல்ராணி மறுத்தார். ஆனால், அவர் அம்மா ரேஷ்மா கல்ராணி கூறும்போது, சஞ்சனாவுக்கு பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் அஜீஸ் பாஷாவுடன் மூன்றரை வருடங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது.

கொரோனா காரணமாக

கொரோனா காரணமாக

ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொள்ள இருந்தனர். கொரோனா காரணமாக தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது என்று கூறியிருந்தார். இந்நிலையில், நடிகை சஞ்சனா கல்ராணி, இஸ்லாம் மதத்துக்கு மாறியதற்கான டாக்குமென்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மதம் மாறிவிட்டார்

மதம் மாறிவிட்டார்

அதில், கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் மதம் மாறிவிட்டார் என்றும் தனது பெயரை மஹிரா என்று மாற்றி வைத்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகை சஞ்சனா கல்ராணியின் திருமண சர்ச்சை கன்னட சினிமாவில் மீண்டும் தொடங்கி இருக்கிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X