உண்மையிலேயே விஜயகாந்தின் தவசி படத்துக்கு சீமான் வசனம் எழுதினாரா?.. கிளம்பியது புது பஞ்சாயத்து!
சென்னை: நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் டிசம்பர் 28-ஆம் தேதி காலை 6:10 மணிக்கு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக தீவுத்திடலில் தற்போது அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ளது.
தேமுதிகவை மிகப்பெரிய அரசியல் கட்சியாக உருவாக்கிய விஜயகாந்த் உயிரிழந்த நிலையில் அரசியல் பாகுபாடு இன்றி அனைத்து கட்சி தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தவசி படத்துக்கு வசனம் எழுதினேன் எனக்கூறி உள்ளார். ஆனால், தற்போது சமூக வலைதளத்தில் அது விவாத பொருளாக மாறி உள்ளது.

துளசி வாசம் மாறினாலும்: உதயசங்கர் இயக்கத்தில் 2001ம் ஆண்டு விஜயகாந்த் டபுள் ஆக்ஷனில் நடித்து வெளியான படம் தான் தவசி. துளசி வாசம் மாறினாலும் மாறும் ஆனால், இந்த தவசி வாசம் மாறாது என விஜயகாந்த் பேசும் வசனம் ரசிகர்கள் நெஞ்சங்களில் என்றுமே நீங்காமல் நிலைத்து இருக்கும். இந்நிலையில், அந்த வசனத்தை எழுதியதே சீமான் தானா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அந்த படத்தின் கிரெடிட்ஸ் கார்டை ஷேர் செய்து சீமான் சொல்வது பொய் என விஜயகாந்த் ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

சீமான் சொன்னது பொய்யா?: தவசி படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் என மூன்றையும் உதயசங்கர் தான் செய்தார் என்றும் சீமான் இந்த விஷயத்திலும் இப்படி பொய் சொல்றாரே என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
தேங்ஸ் கார்ட்: விஜயகாந்த் ரசிகர்கள் கிரெடிட் கார்டை போட்டு விளாசி வரும் நிலையில், அப்போது ஏன் இயக்குநர் சீமான் அவர்களுக்கு நன்றி என தேங்ஸ் கார்டு அந்த படத்தில் விஜயகாந்த் போட்டுள்ளார் என சீமான் தொண்டர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வசனம் எழுதினாரா?: நன்றி கார்டு தான் போட்டுள்ளார்களே தவிர அவர் அந்த படத்துக்கு வசனம் எழுதினாரா என்று எங்கேயும் குறிப்பிடவில்லையே என விஜயகாந்த் ரசிகர்கள் சண்டை போட தவசி படத்துக்கு பழநிபாரதி, சீமான் மற்றும் உதயசங்கர் உள்ளிட்டோர் சேர்ந்து தான் வசனம் எழுதியுள்ளனர் என்கிற ஆதாரத்தையும் சீமான் பொய் சொல்லவில்லை என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











