Shalu Shammu: மாலையும் கழுத்துமாக நிற்கும் ஷாலும்மா.. அட மாப்பிள்ளை யாரு? தீயாக பரவும் பிக்ஸ்!
சென்னை: நடிகை ஷாலு ஷம்மு மாலையும் கழுத்துமாக இருக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதற்கு ஒரு கெஸ்ஸிங் கேப்ஷனையும் கொடுத்து குழப்பி உள்ளார்.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து காமெடியில் கலக்கி இருப்பார் ஷாலு ஷம்மு.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களில் காமெடி நடிகையாக நடித்து வந்த ஷாலு ஷம்மு இரண்டாம் குத்து படத்தில் ஐட்டம் கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை அதிர வைத்தார்.
மாலையும் கழுத்துமாக ஷாலு ஷம்மு: காமெடி நடிகையாக அறிமுகமாகி கவர்ச்சி நடிகையாக இன்ஸ்டாகிராமில் வலம் வரும் ஷாலு ஷம்மு பட்டுப் புடவை கட்டிக் கொண்டு மணக் கோலத்தில் மாலையும் கழுத்துமாக நிற்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திருமணமா அல்லது நிச்சயதார்த்தமா என ரசிகர்கள் குழம்பி விடக் கூடாது என்பதற்காக நிச்சயதார்த்தம் என்பதை ஷாலு ஷம்முவே பதிவிட்டுள்ள நிலையில், ஷாலு ஷம்முவுக்கு நிச்சயம் ஆகிடுச்சா என ரசிகர்கள் ஷாக் ஆகி கேட்டு வருகின்றனர்.
நிச்சயமா? விளம்பர படமா?: நடிகை ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலையும் கழுத்துமாக இருக்கும் போட்டோக்களை பதிவிட்டுள்ள நிலையில்,
"Am in a shoot or am I getting engaged ?" என்கிற கேப்ஷன் போட்டு ரசிகர்களை குழப்பி உள்ளார்.
அதை பார்த்த ரசிகர்கள் அப்போ உங்களுக்கு இப்பவும் நிச்சயம் நடக்கலையா.. வெறும் விளம்பரத்துக்கான செட்டப்பா இது என கலாய்த்து வருகின்றனர்.

வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன?: ஷாலு ஷம்மு தனது விளம்பர ஷூட்டிங் போட்டோக்களை பதிவிட்டுள்ள நிலையில், அவருக்கு நிச்சயம் ஆகவில்லை என்பதை உணர்ந்து கொண்ட ரசிகர்கள் இனிமே நீ வயசுக்கு வந்தா என்ன? வராட்டி என்ன? என ட்ரோல் செய்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
இப்போதைக்கு சினிமா தான் முக்கியம். சீக்கிரம் திருமணம் செய்துக் கொள்ள வேண்டாம், எப்பவுமே எங்களோட ட்ரீம் கேர்ளா இருங்க ஷாலு ஷம்மு என அவரது ரசிகர்களும் கோரிக்கையுடன் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











