twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எல்லாம் பப்ளிசிட்டி தான்.. 25 கோடி நிதி கொடுத்த அக்‌ஷய்.. மறைமுகமாக கலாய்க்கும் சத்ருகன் சின்ஹா!

    |

    மும்பை: பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் அக்‌ஷய் குமார் நிதியளித்திருந்த நிலையில், எல்லாமே பப்ளிசிட்டி ஸ்டன்ட் என பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    Recommended Video

    Breaking: Thala Ajith Massive donation for கொரோனா relief | FEFSI | Lock Down

    கொரோனா பரவலை தடுக்க போராடி வரும் மத்திய அரசுக்கு உதவும் வகையில், பல பிரபலங்களும் PM Careக்கு நிதியளித்து வருகின்றனர்.

    சினிமா துறையில் அதிகபட்சமாக பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நிதியுதவி அளித்திருந்தார். சல்மான் கான், ஷாருக்கான், அமீர்கான் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

    முதல்வர் நிவாரண நிதிக்கு வாரி வழங்கிய நடிகர்கள்.. அஜீத் நம்பர் 1.. லிஸ்ட்டில் ரஜினி.. விஜய் இல்லை!முதல்வர் நிவாரண நிதிக்கு வாரி வழங்கிய நடிகர்கள்.. அஜீத் நம்பர் 1.. லிஸ்ட்டில் ரஜினி.. விஜய் இல்லை!

    பிரதமர் கோரிக்கை

    பிரதமர் கோரிக்கை

    கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது, என்றும் மக்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு தயங்காமல் தங்களால் இயன்ற உதவியை செய்ய முன் வரவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்தார். பிரதமர் மோடியின் டிவீட்டை பார்த்த அக்‌ஷய் குமார் உடனடியாக 25 கோடி உதவுவதாக அறிவித்திருந்தார்.

    பல பிரபலங்கள்

    பல பிரபலங்கள்

    பிரதமர் மோடி கோரிக்கையை தொடர்ந்து டோலிவுட் நடிகர்கள் பிரபாஸ் 4 கோடி ரூபாயும், பவன் கல்யாண் 2 கோடி ரூபாயும், மகேஷ் பாபு, சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல நடிகர்களும் கொரோனா நிவாரண நிதி கொடுக்க முன்வந்தனர். பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதி என அந்த தொகையை பிரித்துக் கொடுத்தனர்.

    அள்ளிக் கொடுத்த அக்‌ஷய்

    அள்ளிக் கொடுத்த அக்‌ஷய்

    இந்த நேரத்தில் நமது கடமை நாட்டு மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வது தான் என பதிவிட்ட அக்‌ஷய் குமார், 25 கோடி ரூபாய் நிதியை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்தார். பின்னர், மும்பை மாநகராட்சி ஊழியர்களுக்கு மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கூடுதலாக 3 கொடி

    பப்ளிசிட்டி ஸ்டன்ட்

    பப்ளிசிட்டி ஸ்டன்ட்

    இந்நிலையில், பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவின் தந்தையும், பழம்பெரும் நடிகருமான சத்ருஹன் சின்ஹா, நடிகர்கள் உதவித் தொகை கொடுப்பதை சொல்லிக் காட்டக் கூடாது என்றும், சமீபத்தில் ஒரு நடிகர் 25 கோடி ரூபாயை கொடுத்ததாக பதிவிட்டுள்ளது எல்லாம் பப்ளிசிட்டி ஸ்டன்ட் என்று அக்‌ஷய் குமாரை மறைமுகமாக சாடியுள்ளார்.

    மோடி மீதும் குற்றச்சாட்டு

    மோடி மீதும் குற்றச்சாட்டு

    பிரதமர் மோடியின் ஊரடங்கு உத்தரவை பாராட்டிய நடிகர் சத்ருஹன் சின்ஹா, ஆனால், இந்த தாமதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என பிரதமர் மோடி மீதும் கொரோனா விவகாரத்தில் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். உதவி செய்பவர்கள் சொல்லிக் காட்டக் கூடாது என்பது தவறு என்றால், உதவி செய்பவர்களை விமர்சனம் செய்வது எந்த மாதிரியான டிசைன் என தெரியவில்லையே என சத்ருஹன் சின்ஹா மீது அக்‌ஷய் ரசிகர்கள் பாய்ந்து வருகின்றனர்.

    English summary
    the veteran actor said that announcing charity is ‘vulgar’. He said that if offensive and demoralizing to hear someone has contributed Rs 25 crore.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X