அஜித்தை தொடர்ந்து.. விக்னேஷ் சிவனுக்கு ’நோ’ சொன்னாரா சிவகார்த்திகேயன்.. அந்த விஷயம் தான் காரணமா?
சென்னை: அஜித்தின் ஏகே 62 படத்தின் வாய்ப்பு கை நழுவியதில் இருந்தே இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு அடுத்தடுத்து சினிமாவில் பலத்த ஏமாற்றங்கள் நடைபெற்று வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
நடிகை நயன்தாராவை நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் கண்டதும் காதலிக்க ஆரம்பித்த விக்னேஷ் சிவன் இருவரும் ரகசியமாக பதிவு திருமணத்தையும் முடித்து விட்டனர்.
கடந்த ஆண்டு அனைவரும் அறியும் வண்ணம் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் சிவன் - நயன்தாரா தற்போது தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

ஜாலியான இயக்குநர்
ரொம்பவே சீரியஸ் மேட்டர்களையும் செம ஜாலியான கதைகளாக மாற்றி தமிழ் சினிமா ரசிகர்களை என்டர்டெயின் செய்து வரும் ஒரு நியூ ஏஜ் இயக்குநர் தான் விக்னேஷ் சிவன். அதனை தனது படங்களில் அழுத்தம் திருத்தமாகவே பதிவு செய்து வருகிறார். ஒரு ரவுடியை கொலை செய்ய இன்னொரு ரவுடியின் உதவியை நாடும் நானும் ரவுடி தான், இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் காதலிக்கும் நபர் என சீரியஸான விஷயங்களை செம ஜாலியாக மாற்றி விடுகிறார்.

சந்தோஷமே போச்சு
இதுவரை ஜாலியாக படங்களை இயக்கி வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு ஜாக்பாட் அடித்தது போல அஜித்தின் ஏகே 62 படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சந்தோஷத்தில் கடந்த ஆண்டு முழுவதும் இருந்து வந்த விக்னேஷ் சிவன் சமீபத்தில் அவரை அந்த படத்தில் இருந்து நீக்கிய நிலையில், சந்தோஷமே இல்லாமல் அடுத்த படத்தை யாரை வைத்து இயக்கலாம் என்கிற முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறுகின்றனர்.

பிரதீப் ரங்கநாதனை வைத்து
கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக லவ் டுடே படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்து பட்டையை கிளப்பினார். அஜித் படத்தை இயக்க முடியாமல் போன நிலையில், விக்னேஷ் சிவன் அடுத்ததாக பிரதீப்பை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளார். ஆனால், ஏஜிஎஸ் உள்ளிட்ட சில தயாரிப்பு நிறுவனங்கள் பிரதீப் வேண்டாம் இன்னும் கொஞ்சம் பெரிய நடிகரை பாருங்க என சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிவகார்த்திகேயன் எஸ்கேப்
சிவகார்த்திகேயனை அணுகி ஒரு படம் பண்ணலாம் என வெகு காலமாகவே விக்னேஷ் சிவன் முயற்சித்து வரும் நிலையில், மாவீரன் படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் தனது படத்தில் நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் போட்ட திட்டத்திற்கு சிவகார்த்திகேயன் சம்மதம் தெரிவிக்கவில்லை என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

கமல் படத்தில் பிஸி
ஏற்கனவே கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஓகே சொல்லி இருப்பதால் அந்த படம் தான் தனது அடுத்த படம் என்பதில் சிவகார்த்திகேயன் உறுதியாக உள்ள நிலையில், விக்னேஷ் சிவனின் கோரிக்கையை இப்போதைக்கு ஏற்க முடியாத சூழலில் இருப்பதாக கூறியுள்ளதாக கூறுகின்றனர்.

லேட்டாகும்
அஜித்தின் ஏகே 62 படத்தின் அறிவிப்பு வர ஒரு பக்கம் லேட் ஆகி வரும் நிலையில், அதே போல விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாக மேலும், தாமதம் ஆகும் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. பிரதீப் ரங்கநாதனை வைத்து கம்மி பட்ஜெட்டில் படம் பண்ணவும் கதை ஒன்றை விக்னேஷ் சிவன் எழுதி வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











