மைக் மோகனை போல சிவகார்த்திகேயனுக்கும் செக்கா?.. கோலிவுட்டில் என்ன நடக்கிறது?..
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டார் என ஒரு பெரிய வார்த்தையை ஒரு பெரிய குற்றச்சாட்டை சாதாரணமாக ஒரு பேட்டியில் வெளிப்படுத்தி பகீர் கிளப்பி உள்ளார் இசையமைப்பாளர் டி. இமான்.

நடிகர் சிவகார்த்திகேயன் உடன் பல ஆண்டுகள் நட்பாக இருந்து சுமார் 5 படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இப்படி சொல்லிவிட்டாரே அப்படி என்ன துரோகத்தை சிவகார்த்திகேயன் செய்திருப்பார் என்கிற கேள்வி அந்த துரோகத்தை தான் செய்திருப்பார் என்கிற முடிவுடன் ஏகப்பட்ட மீம்களும், மோசமான ட்ரோல்களுமாக மாறி சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி உள்ளது.
ஒரு காலத்தில் நன்றாக வளர்ந்து வந்த நடிகர் மைக் மோகனுக்கும் இதே போன்ற ஒரு பஞ்சாயத்து தான் அவருடைய சினிமா வாழ்க்கையையே சீரழித்து விட்டதாக கூறுகின்றனர்.
வெள்ளி விழா நாயகன்: ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்தவர்களையே எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பாடல்களை வைத்துக் கொண்டு கையில் ஒரு மைக்குடன் நடிகர் மோகன் "மலையோரம் வீசும் காற்றும் மனதோடும் பாடும் பாட்டு கேட்குதா" என கேட்க அத்தனை பெண் ரசிகைகளும் மோகனின் அழகை பார்த்து மயங்கி அவரே பாடுகிறார் என நினைத்து வெள்ளி விழா நாயகனாக மாற்றினர்.
அந்த விஷயத்தில் வீக்: கட கடவென சினிமாவில் அசுர வளர்ச்சியை கண்டு வந்த மைக் மோகன் பெண்கள் விஷயத்தில் வீக் என்றும் பல நடிகைகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டதாகவும் அவருக்கு எய்ட்ஸ் நோய் பரவியதாகவும் பகீர் கிளம்ப அவரது சினிமா வாழ்க்கையே ஸ்தம்பித்து போனது.
அதையெல்லாம் மறந்து விட்டு மீண்டும் அவர் சினிமாவில் நடிக்கவே பல ஆண்டுகள் காலியாகி விட்டது. ஹரா படத்தில் ஹீரோவாக நடித்து வரும் மோகன் தளபதி 68 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிவகார்த்திகேயனுக்கு செக்: தற்போது மைக் மோகனை போலவே சிவகார்த்திகேயனுக்கும் கோலிவுட்டில் செக் வைத்துள்ளார்களா? என்கிற கேள்வியை தான் சினிமா பிரபலங்களும் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் எழுப்பி வருகின்றனர். மேலும், டி. இமான் சிவகார்த்திகேயன் தனக்கு என்ன மாதிரியான துரோகத்தை செய்தார் என்பதை வெளிப்படையாக சொல்லாத வரை சிவகார்த்திகேயன் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காத வரை ஏகப்பட்ட யூகங்களும் தவறான கண்ணோட்டங்களும் குவியத்தான் செய்யும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











