யுவன் சங்கர் ராஜாவா? வேண்டாம் வேண்டாம்.. தனுஷ் படத்தில் இருந்து நீக்கம்? என்ன நடந்தது?
சென்னை: இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடிகர் தனுஷ் படத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வருகிறது.
சில மாதங்களுக்கு முன் நடிகர் தனுஷ் நடித்த மாரி 2 படம் வெளியானது. இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் செமையாக ஹிட் அடித்தது.
அதிலும் ரவுடி பேபி பாடல் உலகம் முழுக்க ஹிட் அடித்தது. யூ டியூபில் 650 மில்லியன் வியூவை தாண்டி இந்த பாடல் வைரலாக சென்று கொண்டு இருக்கிறது.

என்ன காரணம்
நீண்ட நாட்களுக்கு பிறகு யுவனும் தனுஷும் சேர்த்து இப்படி ஹிட் கொடுத்து இருக்கிறார்கள். இதனால் இவர்கள் தொடர்ந்து இப்படி படம் பண்ணுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து இதேபோல் ஹிட் காம்போவை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இல்லை
ஆனால் இவர்கள் வரிசையாக அடுத்து எந்த படத்திலும் இணையவில்லை. யுவன் சங்கர் ராஜா தனுஷ் இருவரும் முதலில் அசுரன் படத்தில் இணைய வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. ஆனால் கடைசியில் ஜிவி பிரகாஷ் இதில் இணைந்தார்.

அடுத்து என்ன
அதன்பின் மாரி செல்வராஜ் இயக்கும் படத்திலும் யுவன் சங்கர் ராஜா மியூசிக் கிடையாது. தனுஷின் இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன்தான் மியூசிக் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் செல்வராகவன் தனுஷ் இணையும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மியூசிக் என்று கூறினார்கள்.

என்ன பேச்சு
இதற்கான பேச்சுவார்த்தை நடந்து ஒப்பந்தம் போடும் நிலை வரை சென்றது. ஆனால் கடைசி நொடியில் யுவன் சங்கர் ராஜா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷான் ரோல்டன் மியூசிக் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதற்கான காரணம் ஏன் என்று கூறப்படவில்லை.

என்ன காரணம்
இந்த கடைசி நேர மாற்றத்திற்கு காரணம் என்ன என்று தகவல் வெளியாகவில்லை. ஆனால் யாரோ கொடுத்த அழுத்தம்தான் இந்த கடைசி நேர மாற்றத்திற்கு காரணம். திடீரென்று இசை அமைப்பாளரை மாற்ற யாரோ அழுத்தம் கொடுத்துள்ளனர் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











