சூர்யா ரசிகர்களுக்கு வெறித்தனமான ட்ரீட் ரெடி.. சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கனு இனி அப்டேட் கேட்டுட்டே இருப்பாங்களே
சென்னை: இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜு நடித்துள்ள இந்தப் படத்தின் அறிவிப்பு கிளிம்ப்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சூர்யா - மமிதா பைஜு இடையேயான ரொமான்டிக் வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். 'சார்', 'லக்கி பாஸ்கர்' போன்ற வெற்றிப் படங்களை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்குவதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ஹீரோ மட்டும் இல்ல.. பாடகரும்: இந்நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் புதிய தகவலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' படத்திற்காக சூர்யா சார் ஒரு துள்ளலிசை பாடலை பாடியுள்ளார். அந்தப் பாடலை கென் கருணாஸ் எழுதியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவிருப்பதாகவும், அது ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் ஒரு எனர்ஜிட்டிக் டான்ஸ் நம்பராக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு வெளியாகியதும், சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

கென் கருணாஸின் அடுத்த அசத்தல்: நடிகர் கருணாஸின் மகனும், இளம் நடிகருமான கென் கருணாஸ் தற்போது நடிகராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். சூர்யா பாடியுள்ள இந்தப் பாடலுக்கு அவர் வரிகள் எழுதியிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
முதல் பாடலுக்கே வெயிட்டிங்: ஏற்கனவே அறிவிப்பு கிளிம்ப்ஸ் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' படத்தில், தற்போது சூர்யா பாடியிருக்கும் முதல் பாடல் குறித்த தகவல் வெளியாகியிருப்பதால், அந்த பாடல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. நடிகராக மட்டுமல்லாமல், அவ்வப்போது தனது குரலாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் சூர்யா, இந்த முறையும் தனது துள்ளலான பாடலின் மூலம் ரசிகர்களை ஆட்டம் போட வைப்பார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications