லீக்கானதா தளபதி 66 விஜய் லுக்? சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் படு மாஸான புகைப்படம்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதும், தளபதி 66ஐ ரசிகர்கள் மறந்து தளபதி 67ன் அப்டேட்டுக்காக அலைந்து கொண்டு இருக்கின்றனர்.

ஏற்கனவே விஜய்யின் பீஸ்ட் சறுக்கிய நிலையில், தளபதி 66 படத்தையும் விஜய் ரசிகர்களே இப்படி கண்டு கொள்ளவில்லை என்றால் என்னவாகும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், தளபதி 66 படத்தின் பிரத்யேகமான ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் இணையத்தில் கசிந்துள்ளதாக ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தெலுங்கு பட இயக்குநர்

தெலுங்கு பட இயக்குநர்

தெலுங்கில் வெளியான மகேஷ் பாபுவின் பல படங்களை தமிழில் ரீமேக் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ள நடிகர் விஜய் முதன் முதலாக நேரடியாகவே ஒரு தெலுங்கு பட இயக்குநரான வம்சி உடன் இணைந்து தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பும் ஹைதராபாத்திலேயே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட்டுக்கு மாற்று

பீஸ்ட்டுக்கு மாற்று

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் ஏகப்பட்ட ட்ரோல்களுக்கு உள்ளான நிலையில், அதற்கு மாற்றாக அடுத்ததாக தளபதி 66 படத்தில் மீண்டும் கம்பேக் கொடுப்பார் விஜய் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், விஜய் ரசிகர்களே தளபதி 66 படத்தை கண்டு கொள்வதில்லை என்பது தான் வருத்தமளிக்கும் விஷயம்.

இதுவும் நல்லது தான்

இதுவும் நல்லது தான்

பீஸ்ட் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால் தான் அந்த படம் பெருமளவில் சறுக்கியது. எதிர்பார்ப்பே இல்லாமல் வரும் தளபதி 66 நிச்சயம் பந்தயம் அடிக்கும் என சில உண்மையான விஜய் ரசிகர்கள் தளபதி 66 படத்தின் மீது மட்டுமே தற்போது தங்களின் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றனர்.

லோகேஷ் பண்ண வேலை

லோகேஷ் பண்ண வேலை

விக்ரம் படத்தின் மூலம் கமலுக்கே மிகப்பெரிய கம்பேக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் பண்ண வேலை தான் தளபதி 66 படத்தை மறந்து விட்டு தளபதி 67 படத்திற்கான அப்டேட்டை விஜய் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மேலும், தளபதி 67 படம் முற்றிலுமாக விஜய் படமாக இருக்கக் கூடாது என்றும் லோகேஷ் கனகராஜின் 100 சதவீத படமாக இருக்க வேண்டும் என விஜய் ரசிகர்களே கோரிக்கை வைப்பதை அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

லீக்கானதா தளபதி 66 லுக்

லீக்கானதா தளபதி 66 லுக்

இந்நிலையில், தளபதி 66 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று லீக் ஆகி உள்ளதாக சமூக வலைதளத்தில் நடிகர் விஜய்யின் புகைப்படம் ஒன்றை ரசிகர்கள் காட்டுத்தீ போல பரவி வருகின்றனர். குடும்ப படம் என ரசிகர்கள் நினைத்து தளபதி 66 படத்தை ஓரங்கட்டி வரும் நிலையில், படு மாஸான சண்டைக் காட்சியில் விஜய் என்ட்ரி கொடுப்பது போல அந்த புகைப்படம் டிரெண்டிங்கில் தெறிக்கவிடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X