Thalapathy 69 Story: கடைசியில பாலகிருஷ்ணா படக்கதையா?.. தளபதி 69 குறித்து தீயாக பரவும் தகவல் உண்மையா?

சென்னை: நடிகர் விஜய்யின் கடைசி படமாக தளபதி 69 மாறியுள்ள நிலையில், அந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஹைப் உள்ளது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால், அதற்கு கொஞ்சம் கூட செட்டாகாதது போன்ற ஒரு வதந்தி திடீரென சினிமா வட்டாரத்தில் பரவி வருவது தளபதி ரசிகர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எச். வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க வேண்டிய படத்தின் கதையில் தான் விஜய் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது பாலகிருஷ்ணா நடித்த படத்தின் ரீமேக் தான் தளபதி 69 என்கிற அதிர்ச்சி வெடிகுண்டை தூக்கிப் போடுகின்றனர்.

thalapathy 69 vijay bhagavanth kesari 69

ஏற்கனவே ஜகபதி பாபு ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தை தெலுங்கில் உல்டா செய்து நடித்த நிலையில், அந்த படத்தை தான் லியோவாக எடுத்து விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்தக்கால் நட்டாச்சு: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பிரம்மாண்ட மாநாடு இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில் இன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இந்த விழா சாதாரண அரசியல் நிகழ்வாக இருக்கக் கூடாது என்றும் மக்களுக்காக உழைக்கக்கூடிய கட்சியாக நமது கட்சி மாறும் என்கிற நம்பிக்கையை விதைக்கும் விழாவாக மாற வேண்டும் என நடிகர் விஜய் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

thalapathy 69 vijay bhagavanth kesari 69

ராணுவ கட்டுப்பாடு: மாநாடு என்றதும் நிர்வாகிகள் அனைவரும் குடித்துவிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கட்சி பெயரை கெடுக்க கூடாது என்பதை மறைமுகமாக ராணுவ கட்டுப்பாட்டுடன் நல்ல விழாவாக நடத்தித் தர வேண்டும் என்கிற கோரிக்கையையும் விஜய் வைத்துள்ளார்.

தளபதி 69 படபூஜை: ஒரு பக்கம் அரசியல் மாநாட்டுக்கு ரெடியாகி வரும் தளபதி விஜய் இன்று தளபதி 69 படத்திற்கான பூஜையை போட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் செட் அமைக்கப்பட்டு பூஜா ஹெக்டேவுடன் பாடல் காட்சி ஒன்றையும் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி 69 படம் ரீமேக்கா?: பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், ஸ்ரீ லீலா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் தளபதி விஜய் நடிக்க உள்ள தளபதி 69 திரைப்படம் என்கிற தகவல்கள் சினிமா வட்டாரத்தில் தீயாக பரவி வருகின்றன. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், விஜய்யின் வளர்ப்பு மகளாக மமிதா பைஜுவும் நடிக்கப் போவதாக பகீர் கிளப்பி வருகின்றனர்.

thalapathy 69 vijay bhagavanth kesari 69

உண்மை என்ன?: இந்த படத்தின் கதையை பல வருடங்களுக்கு முன்பே விஜய்க்கு சொல்லி அதன் பின்னர், கமல்ஹாசனுக்கு சொல்லி அரசியல் கதைக்களத்துடன் படத்தை உருவாக்க எச். வினோத் திட்டமிட்டுள்ளார் என்றும் கண்டிப்பாக பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்காக இருக்காது என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. விஜய் ஹேட்டர்கள் கொளுத்திப்போட்ட விஷயம் தான் இந்த பாலகிருஷ்ணா படம் ரீமேக் கதை என்றும் கூறுகின்றனர்.

ஷூட்டிங் சிக்கல்?: அக்டோபர் மாதம் பட பூஜை போடப்பட்டு படப்பிடிப்பை எப்படி நடத்த முடியும் என்கிற கேள்விகளும் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளன. நவம்பர் மாதத்துக்கு மேல் படப்பிடிப்புகள் நடத்த பெஃப்சி அமைப்பு ஒத்துழைக்காது என்றும் கூறப்படுகிறது. தளபதி 69 படத்தின் படப்பிடிப்புக்கு சிக்கல் வரவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால், அனைத்தையும் விஜய் சரி செய்து விடுவார் என்றும் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்றும் ரசிகர்கள் முழு நம்பிக்கையுடன் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X