For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விக்ரம் லேட்டஸ்ட் அப்டேட்...கமலுக்கு ஜோடி இவரா? தீயாய் பரவும் ஃபோட்டோ

  |

  சென்னை : ஏறக்குறைய 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார் கமல். தனது சினிமா வாழ்க்கையிலேயே அதிக ஆண்டுகள் கமல் படம் நடிக்காமல் இருப்பது இப்போது தான். அதிக நாட்கள் கழித்து கமல் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  கபிலன் முதல் பாக்கியம் வரை.. முயற்சி வீண் போகவில்லை.. சார்பட்டா பரம்பரையை பாராட்டிய பிரபல இயக்குநர்!கபிலன் முதல் பாக்கியம் வரை.. முயற்சி வீண் போகவில்லை.. சார்பட்டா பரம்பரையை பாராட்டிய பிரபல இயக்குநர்!

  அரசியல், தேர்தல், இந்தியன் 2 விவகாரம் போன்ற பல காரணங்களால் கமல், புதிய படங்கள் எதிலும் நடிக்கவில்லை. இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது விபத்து, கொரோனா, லாக்டவுன், வழக்கு என அடுத்தடுத்த குறுக்கீடுகளால் அந்த படத்தின் வேலையும் பாதியிலேயே நிற்கிறது.

  காரைக்குடியில் ஷுட்டிங்

  காரைக்குடியில் ஷுட்டிங்

  விக்ரம் படத்தின் ஷுட்டிங் காரைக்குடியில் ஆகஸ்ட் 20 ம் தேதி துவங்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை எளிய முறையில் சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். கமலின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.

  முதல் முறையாக அனிருத்

  முதல் முறையாக அனிருத்

  இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினி, விஜய் படங்களைத் தொடர்ந்து கமல் படத்திற்கு இசையமைக்க உள்ளார் அனிருத். கமல் படத்தில் அனிருத் இசை அமைப்பது இதுவே முதல் முறையாகும். படத்தில் 5 வில்லன்கள் என கூறப்படுவதால் பேக்கிரவுண்ட் மியூசிக் மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ஹீரோயின் யாருன்னு சொல்லவே இல்லையே

  ஹீரோயின் யாருன்னு சொல்லவே இல்லையே

  விக்ரம் படம் உறுதி செய்யப்பட்ட உடனேயே அடுத்தடுத்து வில்லன்கள் பற்றிய அறிவிப்புக்களை வெளியிட்டனர். இப்போது ஷுட்டிங்கும் துவங்க போகிறது. ஆனால் இதுவரை ஹீரோயின் யாரென்று அறிவிக்கவில்லையே என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இதனால் பல நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு, பல வதந்திகளை இணையத்தில் பரவ விட்டனர்.

  இவர் தான் ஹீரோயினா

  இவர் தான் ஹீரோயினா

  இந்நிலையில் நடிகை ஆண்டிரியா நேற்று, ரெட் கோட் அணிந்த ஃபோட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதில், code red என கேப்ஷன் பதிவிட்டிருந்தார். இதனால் விக்ரம் படத்தில் இவர் தான் ஹீரோயினாக நடிக்கிறார் என செய்தி பரவியது. ஆனால் இது பற்றிய முறையான அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.

  நான்காவது முறையாக இணைகிறாரா

  நான்காவது முறையாக இணைகிறாரா

  ஒருவேளை இது உண்மையானால், கமலுடன் ஆண்டிரியா நான்காவது முறையாக இணைந்து நடிக்கும் படம் இதுவாக இருக்கும். இதற்கு முன் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் கமலுடன் இணைந்து நடித்துள்ளார் ஆண்டிரியா. ஆண்டிரியா தற்போது மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் செம ஹாட்டாக இருந்தது. இந்த படத்தில் ஆண்டிரியா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளது தான் படத்திற்கு பெரிய விளம்பரமாகி விட்டது.

  எதற்காக இந்த ஃபோட்டோ

  எதற்காக இந்த ஃபோட்டோ

  விக்ரம் படத்தில் தான் நடிக்க போவதாக ஆண்டிரியா நேரடியாக எதையும் சொல்லவில்லை. ஆனால் ஐபிசிசி வெளியிட்ட code red for humanity அறிக்கையில் உலக வெப்பமயமாதல் பற்றி எச்சரிக்கப்பட்டது. இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆண்டிரியா ரெட் கோட் அணிந்து போஸ் கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

  VIKRAM FIRST LOOK | மொத்தமே FANBOY Moment தான் | Kamal Hassan, Lokesh Kanagaraj
  போக போக தெரியும்

  போக போக தெரியும்

  உண்மையாகவே காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த தான் ஆண்டியா இந்த ஃபோட்டோவை பதிவிட்டாரா அல்லது விக்ரம் படத்திற்காகவா என்பது விரைவில் தெரிந்து விடும். தனக்கு ஹீரோயின் யார் என்பதை தயாரிப்பாளரான கமல் தான் முடிவு செய்ய வேண்டும். விக்ரம் படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் பேனரில் கமல் மற்றும் ஆர்.மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.

  English summary
  Actress Andrea shared a photo of herself wearing a red coat on Instagram yesterday. In it, the caption was posted as code red. Thus the news spread that she is playing the heroine in Vikram movie. But no formal announcement has been made yet.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X