Don't Miss!
- Automobiles
அனல் பறக்கும் ஏலம்... மஹிந்திராவின் 16 லட்ச ரூபா காரை கோடிகளை கொட்டி வாங்க முந்தியடிக்கும் கோடீஸ்வரர்கள்!
- Technology
செவ்வாய் கிரகத்தில் தெரிந்த கரடி உருவம்.. NASA வெளியிட்டுள்ள புகைப்படத்தால் பரபரப்பு!
- Lifestyle
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
- News
கடப்பாரை நான் எடுத்து வரவா? நீ என்ன வேலை செய்ற? அதிகாரியை லெப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் மஸ்தான்!
- Sports
ஹர்திக் பாண்டியா செய்த மிகப் பெரிய தவறு.. தீபக் ஹூடாவை நடத்திய விதத்தை கவனிச்சீங்களா? வாய்ப்பு மிஸ்
- Finance
கௌதம் அதானியை இனி காப்பாற்ற முடியாதா..? 10 பில்லியன் டாலர் மாயம்.. 7வது இடம்..!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
Thunivu Trailer: பீஸ்ட் சாதனையை முந்தியதா துணிவு ட்ரெய்லர்? 24 மணி நேரத்தில் 30 மில்லியன் வியூஸ்!
சென்னை: அஜித் குமார், மஞ்சு வாரியர் நடிப்பில் வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள துணிவு படத்தின் அட்டகாசமான ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் 30 மில்லியன் வியூஸ் அள்ளி புதிய சாதனையை படைத்துள்ளது என துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அட்டகாச அப்டேட்டை வெளியிட்டு அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் சாதனையை துணிவு படம் சமன் செய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய் படத்தின் ட்ரெய்லர் சாதனையை முறியடிக்க முடியும என ரசிகர்கள் சவால் விட்ட நிலையில், துணிவு ட்ரெய்லர் தரமான சம்பவம் செய்துள்ளது.
அந்த
விசயத்துக்கு
வயசெல்லாம்
ஒரு
மேட்டரே
இல்லை...
போல்டாக
பேசிய
ஸ்ருதி
ஹாசன்

30 மில்லியன் வியூஸ்
புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி இரவு 7 மணிக்கு அஜித் ரசிகர்களுக்காக துணிவு படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியானது. வலிமை படத்தில் இருந்து டோட்டலாக மாறி நடிகர் அஜித் மாஸ் காட்டிய நிலையில், தொடர்ந்து அந்த படத்தின் ட்ரெய்லரை அஜித் ரசிகர்கள் அதிகளவில் ரிப்பீட் மோடில் பார்த்து 30 மில்லியன் வியூஸ் எனும் இமாலய சாதனையை படைத்துள்ளனர்.

பீஸ்ட் ரெக்கார்ட் முறியடிப்பு
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் 30 மில்லியன் வியூஸ் அள்ளி இருந்தது. இந்நிலையில், 30 மில்லியன் வியூஸ் கடந்து துணிவு ட்ரெய்லர் பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் சாதனையை சமன் செய்துள்ளது.

பாடல்கள் வியூஸ் குறைவு
துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சில்லா சில்லா, செகண்ட் சிங்கிளான காசேதான் கடவுளடா மற்றும் கேங்ஸ்டா உள்ளிட்ட பாடல்கள் வெளியான போது அவற்றின் வியூஸ் மிகவும் குறைந்திருந்தது. இந்நிலையில், துணிவு படத்தின் ட்ரெய்லர் எக்கச்சக்க வியூஸ்களை கடந்து அதிரடி காட்டி உள்ளது.

25 மில்லியன் தான்
தயாரிப்பாளர் போனி கபூர் ரியல் டைமில் துணிவு படத்தின் ட்ரெய்லர் 30 மில்லியன் வியூஸ் கடந்து விட்டதாக ட்வீட் போட்டு அஜித் ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார். அதே சமயம் விஜய் ரசிகர்கள் யூடியூபில் துணிவு ட்ரெய்லர் இப்ப கூட 25 மில்லியன் வியூஸ் தான் காட்டுது ஏமாற்று வேலை என ட்ரோல் செய்து வருகின்றனர்.

வாரிசு ட்ரெய்லர் எப்போ
அஜித்தின் துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சாதனை படைத்துள்ள நிலையில், வாரிசு படத்தின் ட்ரெய்லர் குறித்த எந்தவொரு அப்டேட்டையும் தில் ராஜு வெளியிடாமல் இருப்பது விஜய் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி உள்ளது. எப்போதான் வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என ரசிகர்கள் வெறித்தனமாக கேட்டு வருகின்றனர். துணிவு ட்ரெய்லர் சாதனையை வாரிசு ட்ரெய்லர் முறியடிக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்..