Trisha - ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே குடித்தாரா த்ரிஷா?.. பரபரக்க வைக்கும் தகவல்

சென்னை: Trisha (த்ரிஷா) பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டியில் பகிர்ந்துகொண்ட விஷயத்தை அடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே த்ரிஷா குடித்தாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.

ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக தலைக்காட்டி பிறகு மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் ஹிட்டடிக்க தமிழின் முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்தை அவர் பெற்றார். குறிப்பாக 2000ஆம் ஆண்டுக்கு பிறகு பல வருடங்கள் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியிருந்தார் த்ரிஷா.

Did Trisha drink at the shooting spot itself Cheyyaru Balu Reveals Shocking Information

முன்னணி ஹீரோக்களுடன்: ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி என தமிழ் சினிமாவில் ஏறத்தாழ அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துவிட்டார். அதிலும் விஜய்க்கும் அவருக்கும் உருவான கெமிஸ்ட்ரி ரசிகர்களை கட்டிப்போட்டது. இருவரும் இணைந்து நடித்த கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களில் கில்லியும், திருப்பாச்சியும் மெகா ப்ளாக்பஸ்டர் ஆகி கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக அவர்களை மாற்றியது.

பல வருடங்கள் கழித்து: விஜய்யும், த்ரிஷாவும் கடைசியாக குருவி படத்தின் இணைந்து நடித்தனர். அதன் பிறகு தற்போது (கிட்டத்தட்ட 13 வருடங்கள்) லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கின்றனர். பல வருடங்கள் கழித்து தங்களது ஃபேவரைட் ஜோடியை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

லைம் லைட்டில்: இதற்கிடையே த்ரிஷா சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆன பிறகும் இப்போதும் அவர் லைம் லைட்டிலேயே இருக்கிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படம் வந்தது. அதன் பிறகு கௌரவ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். நயன் தாராவும் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளை கவனிப்பதில் கவனம் செலுத்துவதால் த்ரிஷா மீண்டும் பெரிய ரவுண்டு வர ஆரம்பித்திருக்கிறார்.

Did Trisha drink at the shooting spot itself Cheyyaru Balu Reveals Shocking Information

சர்ச்சை: த்ரிஷா எவ்வளவு புகழடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சையையும் சந்தித்தவர். அவர் பயங்கரமாக மது குடிப்பார் என்ற தகவல் பல காலமாகவே திரைத்துறையில் உண்டு. இந்தச் சூழலில் பத்திரிகையாள செய்யாறு பாலு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய விஷயத்தில், "சைதாப்பேட்டையில் ஒரு ஸ்லம் ஏரியாவில் படத்தின் ஷூட்டிங் நடந்தது. முன்னணி ஹீரோவும், முன்னணி ஹீரோயினும் நடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போதெல்லாம் எலைட் ஷாப்கள் இல்லை. பர்மா பஜாரிலிருந்து மதுபானம் ஒருவர் மூலம் வாங்கி வரப்பட்டு நடிகையிடம் கொடுக்கப்பட்டது. அதை அவர் ஒரு பாட்டிலில் ஊற்றிக்கொண்டார். அந்தப் படம் நம்பர் பெயரில் வந்த படம்" என்றார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சைதாப்பேட்டையில் ஸ்லம் ஏரியாவில் எடுக்கப்பட்டு நம்பர் பெயரில் வந்த படம் ஆறு படமாகத்தான் இருக்க முடியும். அந்த சமயத்தில் த்ரிஷாதான் முன்னணி நடிகையாக இருந்தார். எனில் ஷூட்டிங் ஸ்பாட்டில் மதுபானம் வாங்கி குடித்தது த்ரிஷாதானா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X