ஏ.ஆர். ரஹ்மான் தங்கையை காதலித்து கல்யாணம் பண்ணி ஏமாற்றினாரா பிஸ்மி.. வெளியான ஷாக் தகவல்!

சென்னை: ஏ.ஆர். ரஹ்மான் தங்கையை காதலித்து கல்யாணம் செய்து ஏமாற்றியவர் தான் பிஸ்மி என்று இணையத்தில் அதிர்ச்சியான தகவல் ஒன்று பரவி வருகிறது.

சினிமா மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, சினிமா பிரபலங்கள் குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் தனது யூடியூப் சேனலில் பேசி வருகிறார்.

did Valai pechu Bismi cheat on AR Rahmans sister

அந்த வகையில் பிஸ்மி, சீனு ராமசாமியை பற்றி பகிரங்கமாக குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

பிஸ்மி சர்ச்சைக்குரிய கருத்து: அதாவது இடம் பொருள் ஏவல் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிகை மனிஷா யாதவ் தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் வந்த போது இயக்குனர் சீனு ராமசாமி எல்லை மீறியதால் நடிகை படத்தில் இருந்து விலகியதாக பிஸ்மி அதிர்ச்சியான தகவலை கூறியிருந்தார்.

சீனு ராமசாமி பதில்: பொது வழியில் இயக்குனர் சீனு ராமசாமியை பற்றி பிஸ்மி இவ்வாறு கூறியது சர்ச்சையாக வெடித்தது. இதற்கு பதிலளித்த சீனு ராமசாமி தனது சமூக பக்கத்தில் ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். அதாவது மனிஷா யாதவ் முதல் நாள் படப்பிடிப்பில் முதல் சாட்டிலேயே கிட்டத்தட்ட 28 டேக்குகள் வாங்கினார் என அடுக்கடுக்கான கேள்விகளை சீனு ராமசாமி கேட்டிருந்தார்.

ஏ.ஆர். ரஹ்மான் தங்கையை ஏமாற்றினாரா: சீனு ராமசாமி குறித்து பிஸ்மி பேசியது பெரும் புயலை கிளப்பி வரும் நிலையில், பத்திரிக்கையாளர் பிஸ்மி குறித்து அதிர்ச்சியான செய்தி ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. அதாவது பிஸ்மி, ஏ.ஆர். ரஹ்மான் தங்கை கலந்து கொண்ட மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவரை காதலித்ததாகவும், பின் அவரை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகவும் செய்தி பரவி வருகிறது.

மோசமானவர்: இதனால் தான் ஏ.ஆர். ரஹ்மான் குறித்து பிஸ்மி அவ்வப்போது மோசமாக பல அவதூறாக கருத்துக்களை பேசி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும், பிஸ்மி குறித்து பயில்வான் ரங்கநாதன் கடந்த ஆண்டு பேட்டி அளித்திருந்தார். அதில், ரகுமான் தங்கச்சியை காதலிச்சு கல்யாணம் பண்ணி துரத்தி விட்டுட்டாரு. இல்லன்னு அவரால சொல்ல முடியுமா என்று பேசி இருந்தார். தற்போது இணையத்தில் அந்த வீடியோ வலம் வந்து கொண்டு இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X