விஜய்யின் பிகில் பட வியாபாரத்தை ஓரங்கட்டியதா அஜித்தின் வலிமை ?
சென்னை : அஜித் நடிக்கும் வலிமை படம் கடந்த 2 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக தொடர்ந்து இந்த படத்தின் வேலைகள் தாமதமாகி வருகிறது.
வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் எப்போது வரும் என அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டு காத்திருக்கும் சமயத்தில், வலிமை படத்தின் வியாபாரம் பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

பட்ஜெட் தொகையை வசூத்த வலிமை
வலிமை படம் ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் படம் தாமதமாவதால் பட்ஜெட் தொகை கூடுதலாக ரூ.25 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படம் ஃபஸ்ட்லுக் வெளியிடுவதற்கு முன்பே ரூ.200 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளது.

பிகிலை எட்டிய வலிமை வியாபாரம்
உலக அளவில் படத்தின் தியேட்டர் ரிலீஸ், சேட்டிலைட் உரிமம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் ரூ.200 முதல் ரூ.210 கோடி வரை வியாபாரம் ஆகி உள்ளது. இது கிட்டதட்ட விஜய்யின் பிகில் படத்தின் வியாபாரத்திற்கு சமம்.

பிகிலை மிஞ்சியதா வலிமை
இதற்கு முன் அதிக வியாபாரம் ஆன படங்களின் பட்டியலில் ரஜினியின் 2.0 ரூ.370 கோடியுடன் முதல் இடத்திலும், விஜய்யின் பிகில் ரூ.220 கோடியுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தன. தற்போது வலிமை ரூ.200 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படக்குழுவினர் அது பற்றி ஏதும் சொல்லாததால் பிகில் படத்தின் வியாபாரத்தை வலிமை மிஞ்சியதா, இல்லையா என சரியாக தெரியவில்லை.

போலீஸ் அதிகாரியாக அஜித்
ஹச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய சண்டைக் காட்சிகளுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. போனி கபூர், ஜீ ஸ்டூடியோசுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்.

ஏற்கனவே எடிட்டிங் முடிஞ்சிடுச்சு
எடிட்டிங், இசையமைப்பு உள்ளிட்ட வேலைகள் ஏற்கனவே கிட்டதட்ட முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. ஃபஸ்ட்லுக், மோஷன் போஸ்டரும் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











