Varun Dhawan: விஜய்யின் ரீமேக் படத்தில் நடித்த நடிகர்.. ஒரு பிரச்னையை எவ்வளவு அழகா ஹேண்டில் பண்றாருனு பாருங்க!
மும்பை: பாலிவுட் நடிகர் வருண் தவான் தற்போது தனது அடுத்து ரிலீஸ் ஆக உள்ள படமான "சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி" படத்திற்கான புரோமோசன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியாகி பெரும் பேசு பொருளாகி உள்ளது. இந்த வீடியோவில், வருண் தவான் மற்றும் அவரது ஓட்டுநர் மீது ஒருவர் குற்றம்சாட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது.
வருண் தவான் மீதும் அவரது காரின் ஓட்டுநர் மீதும் குற்றச்சாட்டு வைக்கும் அந்த நபர், வருண் தவானின் ஓட்டுநர் தன்னை இடித்து விட்டதாகவும், தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் அந்த வீடியோவில் கூறுகிறார். மேலும் அந்த வீடியோவில் ஒரு காவல்துறை அதிகாரி இருப்பதும் பதிவாகியுள்ளது. இந்த சூழ்நிலையை வருண் தவான் அமைதியாகக் கையாண்டது தான் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவர், தன் மீது குற்றம் சாட்டிய நபரை சமாதானப்படுத்தினார். குறிப்பாக தனது காருக்குள் ஏறுவதற்கு முன் அந்த நபரின் குற்றச்சாட்டுகளுக்கு அமைதியாக பதிலளித்தார்.

இதுதான் தற்போது பலரது கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல், இந்த சம்பவம் இணையத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. வருண் தவானின் இந்த அணுகுமுறையை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். "நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற சூழ்நிலைகளை கையாளும் புத்திசாலித்தனம் வருணிடம் உள்ளது. அவர் பக்குவமானவர், உணர்ச்சிவசப்படுபவர் அல்ல" என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இணைய வாசி ஒருவர், "வருண் இதை சரியாகக் கையாண்டார். எந்த பிரச்சனையும் இல்லாமல் சரிங்க சார், சரிங்க சார் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்" என்று குறிப்பிட்டார். இந்த பிரச்னைக்கு காரணமே வருண் தவானின் ஓட்டுநர் தான் என்பதால், இதில் வருண் தவானை சம்பந்தப்படுத்தத் தேவையில்லை என்றும் பலர் பேசி வருகிறார்கள். பிரபலங்கள் பொது இடங்களில் ஏற்படும் சம்பவங்களை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பது குறித்து இந்த வீடியோ விவாதங்களை உருவாக்கியுள்ளது.
Varunardo and his driver getting into some minor trouble after an accident. Apparently Varun's driver verbally abused the other guy
byu/Diedalonglongtimeago inBollyBlindsNGossip
பராட்டு: வருண் தவானின் இந்த அமைதியான அணுகுமுறையை பல நெட்டிசன்கள் பாராட்டினர். இது சூழ்நிலையை மேலும் மோசமடையாமல், நேர்த்தியாக கையாண்டுள்ளார் என்று பாராட்டி வருகின்றனர். ஷஷாங்க் கைத்தான் இயக்கிய "சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி" படம் அக்டோபர் 2, 2025 அன்று வெளியாக உள்ளது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் "காந்தாரா சாப்டட் 1" படத்துடன் மோதவுள்ளது.
ஜான்வி கபூர்: சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி படத்தில் வருண் தவான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் ஜான்வி கபூர், சானியா மல்ஹோத்ரா, மற்றும் ரோஹித் சரஃப் ஆகியோரும் நடித்துள்ளனர். "சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி" படத்திற்கான விளம்பரப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ரசிகர்கள் இந்தப் படத்தின் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. வருண் தவான், விஜய்யின் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியைச் சந்தித்திருந்தது.
பாக்ஸ் ஆபிஸ் பந்தயம்: "காந்தாரா அத்தியாயம் 1" மற்றும் "சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி" ஆகிய இரண்டு படங்களில் எது பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் பாலிவுட் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் அந்த வீடியோவில், வருண் தவானின் இந்த சம்பவம், பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதற்கு ஒரு சான்று. அதே நேரத்தில், வருண் தவானின் அமைதியான அணுகுமுறை பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











