»   »  தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா பிரபல நடிகரின் மனைவி?

தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா பிரபல நடிகரின் மனைவி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் வருண் சந்தேஷின் மனைவி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.

தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் வருண் சந்தேஷ். அவரின் மனைவி நடிகை விதிகா ஷெரு. விதிகா உயிர் மொழி, மகாபலிபுரம் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் விதிகா தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வெளியானது.

தற்கொலை

தற்கொலை

விதிகா மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது. விதிகா அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது.

விதிகா

விதிகா

ஹைதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் விதிகா என்று சமூக வலைதளங்களில் பேச்சாக கிடந்தது.

நலம்

நலம்

தன்னை பற்றி பரவிய செய்தி குறித்து அறிந்த விதிகா அதிர்ச்சி அடைந்துள்ளார். அமெரிக்காவில் இருந்து ஊர் திரும்பியவர் தூங்குவதற்காக மாத்திரை போட்டுள்ளார். மறுநாள் காலை அவர் எழாததால் அவரின் பெற்றோர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவ்வளவு தான்.

ட்வீட்

என்னை பற்றி பரவிய செய்தியில் உண்மை இல்லை. அனைத்துமே வதந்தி தான். நாங்கள் நன்றாக உள்ளோம் என்று விதிகா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சந்தேஷ்

நானும், என் மனைவியும் ஒருவரையொருவர் காதலிக்கிறோம். நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். எங்களை அப்படியே இருக்க விடுங்க ப்ளீஸ். வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று ட்விட்டர் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார் வருண் சந்தேஷ்.

Varun Sandesh Reacts On Rumors About his wife Vithika Sheru
English summary
Actor Varun Sandesh's wife Vithika Sheru has rubbished the rumours that she tried to end her life by taking sleeping pills.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil