ரஜினிகாந்தின் ‘கூலி’ டீசரை கலாய்த்தாரா வெங்கட் பிரபு?.. பதறியடித்து விளக்கமளித்த ’கோட்’ இயக்குநர்!
சென்னை: தமிழ் சினிமா படங்களின் டீசர் மற்றும் டிரைலர் எல்லாமே ஒரே மாதிரி இருப்பதாக யாரடி நீ மோகினி படத்தில் நடித்த கார்த்திக் வீடியோ ஒன்றை வெளியிட்டு கலாய்த்துள்ளார். அவரது வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெங்கட் பிரபு ஷேர் செய்து சிரிக்கும் எமோஜிக்களை பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்தின் அறிமுக டீசர் வீடியோ வெளியான நிலையில், போய் பார்த்து தான் நடிகர் கார்த்திக் குமார் கலாய்த்து வீடியோ வெளியிட்டுள்ளார் என்றும் அந்த வீடியோவை ஆதரிக்கும் விதமாக வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார். இதன் மூலம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்தின் டீசரை தான் அவர் கலாய்த்துள்ளார் என சர்ச்சையை கிளப்பினர்.

இந்நிலையில் உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக ட்வீட் ஒன்றை இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது வெளியிட்டுள்ளார்.
கார்த்திக் குமார் நக்கல்: தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படத்தில் அவருக்கு நண்பராக நடித்து பிரபலமானவர் கார்த்திக் குமார். பாடகி சுசித்ராவை திருமணம் செய்து கொண்ட அவர் சுச்சி லீக்ஸ் விவகாரத்துக்கு பிறகு பாடகி சுசித்ராவை விவாகரத்து செய்துவிட்டு அம்ருதா ஸ்ரீனிவாசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் இருந்து விலகப்போவதாக அறிவித்த நடிகர் கார்த்திக் குமார் ஸ்டாண்ட் அப் காமெடியனாக வலம் வருகிறார். தற்போது தமிழ் சினிமா படங்களின் டிரெய்லர் குறித்து அவர் கிண்டலாக பேசிய வீடியோ தீயாக பரவி வருகிறது.
அதோ வரான் இதோ வந்துட்டான்: தமிழ் சினிமாவில் வெளியாகும் பல டிரெய்லர்களும் ஹீரோ அதோ வரான்.. இதோ வந்துட்டான்.. இங்க குதிச்சிட்டான்.. உங்கள காலி பண்ண போறான் என்கிற ரகத்தில் காமெடியாக உள்ளதாக கலாய்த்து வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதைப் பார்த்த வெங்கட் பிரபு அதற்கு ஸ்மைலி போட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கூலியை கலாய்த்து: விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள கூலி படத்தின் அறிமுக வீடியோவை பார்த்து விட்டு கார்த்திக் குமார் கலாய்த்ததை ஆதரித்துள்ளார் என நெட்டிசன்கள் சிலர் சோசியல் மீடியாவில் கொளுத்தி போட்ட நிலையில், உடனடியாக அதற்கு பதிலடி கொடுத்து இந்த பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் வெங்கட் பிரபு.

விளக்கம் கொடுத்த வெங்கட் பிரபு: லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்தின் கூலியை கலாய்த்து தான் வெங்கட் பிரபு இப்படி போட்டுள்ளார் என கோர்த்து விட்டதை கவனித்த வெங்கட் பிரபு, “இல்லவே இல்லை.. இது எல்லா இயக்குநர்களுக்கும் பொதுவான பொருத்தமாக பொருந்தும் கருத்துதான். கமர்சியல் படங்களை ஒரே பாணியில் எடுப்பதை தான் அவரும் கலாய்த்து இருந்தார். வித்தியாசமான டெம்ப்ளேட்டில் கமர்சியல் படங்களைக் கொடுத்தால் ரசிகர்கள் வரவேற்பு தருவார்களா?” என்கிற கேள்வியையும் வெங்கட் பிரபு எழுப்பியுள்ளார்.
கோட் வித்தியாசமாக இருக்குமா?: வழக்கமான கமர்ஷியல் படங்களை போல அல்லாமல் விஜய்யின் கோட் படமாவது வித்தியாசமாக இருக்குமா வெங்கட் பிரபு என ரசிகர்கள் பலரும் அவரிடம் இதுதான் வாய்ப்பு என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். வரும் செப்டம்பர் 5ம் தேதி அதற்கான பதில் தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications