இதுதான் மரியாதை.. பார்த்திபன் காலில் விஜய் அப்பா விழுந்தாரா? பேச்சால் ஏற்பட்ட சர்ச்சை!

இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் காலில் நடிகர் விஜய்யின் அப்பா சந்திரசேகர் விழுந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

மத்தியஅரசு மதிப்பை இழக்கும் பார்த்திபனுக்கு விருதுகொடுக்காவிட்டால் |S A CHANDRASEKAR|FILMIBEAT TAMIL

சென்னை: இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் காலில் நடிகர் விஜய்யின் அப்பா சந்திரசேகர் விழுந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆர். பார்த்திபனின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகி உள்ள ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது நல்ல விமர்சனம் மற்றும் வசூலை பெற்று படம் ஹிட் அடித்துள்ளது.

இந்த படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய்யின் அப்பா இயக்குனர் சந்திரசேகர் கலந்து கொண்டார்.

என்ன பேசினார்

என்ன பேசினார்

இந்த விழாவில் பேசிய இயக்குனர் சந்திரசேகர், நான் பொதுவாக சிலரை மட்டும் பார்த்துதான் வியந்து இருக்கிறேன். அதிலும் மூன்று பேரின் படங்களை பார்த்துவிட்டு பெரிதும் வியந்துள்ளேன். நான் பார்த்து முதலில் வியந்த படம் சங்கராபரணம்.

காலில் விழுந்தேன்

காலில் விழுந்தேன்

இந்த படத்தை பார்த்துவிட்டு அதன் இயக்குனர் கே விஸ்வநாத் காலில் விழுந்தேன் . அதன்பின் அரங்கேற்றம் பார்த்துவிட்டு இயக்குநர் கே பாலச்சந்தர் காலில் விழுந்தேன். கடைசியாக புதிய வார்ப்புகள் பார்த்துவிட்டு இயக்குனர் பாக்யராஜ் காலில் விழுந்தேன்.

மரியாதை

மரியாதை

நான் அதே மரியாதையை ஒத்த செருப்பு படம் பார்த்துவிட்டு பார்த்திபனுக்கு செய்துள்ளேன். அவர் மிக அருமையாக படம் எடுத்துள்ளார். ஒரே நபரை வைத்து இவ்வளவு பெரிய திரில்லரை கொண்டு செல்ல முடியும் என்பதை அவர் சிறப்பாக நிரூபித்துவிட்டார் என்று கூறி உள்ளார்.

பலரும் கேள்வி

பலரும் கேள்வி

ஆனால் இதில் சந்திரசேகர் பார்த்திபன் காலில் விழுந்தாரா என்று கூறவில்லை. அதே சமயம் ''நான் அவருக்கு அந்த மரியாதையை செய்துவிட்டேன்'' என்று சந்திரசேகர் கூறியுள்ளார். இதனால் பார்த்திபன் காலில் சந்திரசேகர் விழுந்து மரியாதை செய்து இருப்பாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X