ரஜினிகாந்துக்கு வசூல் பெஞ்ச் மார்க் செட் செய்கிறாரா விஜய்?.. நாளை வேட்டையன் ரிலீஸ்.. இப்போ எதுக்கு?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், திடீரென விஜய் நடிப்பில் கடந்த மாதம் 5ம் தேதி வெளியான கோட் படத்தின் வசூல் அறிவிப்பை கூட்டிக் கழித்து கணக்கு பண்ணி தற்போது அர்ச்சனா கல்பாத்தி வெளியிட என்ன காரணம் என்கிற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி ஓடிடியில் ஒரு மாதத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு அங்கேயும் ரசிகர்களை உலகளவில் கவர்ந்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் 400 கோடி பட்ஜெட்டில் உருவான தி கோட் திரைப்படம் லைஃப் டைம் வசூலாக எவ்வளவு ஈட்டியிருக்கிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

vettaiyan goat box office

கோட் லைஃப் டைம்: விஜய் நடித்த கோட் படத்தின் லைஃப் டைம் வசூல் 440 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியான நிலையில், அதெல்லாம் இல்லைங்க அதை விட தளபதி விஜய் படம் வசூல் வேட்டை ஆடியிருக்கிறது என்பதை அறிவிக்கும் விதமாக அர்ச்சனா கல்பாத்தி தற்போது கோட் திரைப்படம் இதுவரை 455 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

vettaiyan goat box office

வேட்டையன் ரிலீஸுக்கு முன்பு ஏன்?: ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், தற்போது விஜய் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக ஏஜிஎஸ் நிறுவனம் ரசிகர்கள் கேட்காமலே வசூல் அறிவிப்பை வெளியிட காரணம் என்ன? என்றும் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்துக்கான பாக்ஸ் ஆஃபிஸ் பெஞ்ச் மார்க்கை விஜய் செட் செய்கிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

தேவரா வசூல் அறிப்பு: வேட்டையன் பஞ்சாயத்து ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஜூனியர் என்டிஆரின் தேவரா படத்தின் வசூல் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், அதற்கு நிகராக கோட் படத்தின் வசூல் அறிவிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக வெளியிட்டு இருக்கிறார்களா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

vettaiyan goat box office

ஜூனியர் என்டிஆர் புலம்பல்: தேவரா படத்தை கடுமையாக பலரும் விமர்சித்த நிலையில், விமர்சனங்களுக்கு எதிராக ஜூனியர் என்டிஆர் திடீரென தனது கருத்தை தெரிவித்து புலம்ப காரணம் என்ன? என்கிற கேள்விகளும் சமூக வலைதளத்தில் எழுந்துள்ளன. 300 கோடி பட்ஜெட்டில் வெளியான தேவரா திரைப்படம் 466 கோடி வசூல் என்றால் நல்ல வசூல் தானே என்றும் 1000 கோடியை தாண்டவில்லையே என்கிற வருத்தத்தில் அவர் பேசுகிறாரா? என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

வேட்டையன் வசூல் எப்படி இருக்கும்?: ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரோகிணி, ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், முதல் நாள் வசூல் 100 கோடியை தாண்டுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை என்றும் 60 முதல் 70 கோடி ரூபாய் வசூலை வேட்டையன் திரைப்படம் கடக்கும் என்றும் கூறுகின்றனர். வேட்டையன் படத்தின் பட்ஜெட் 160 முதல் 200 கோடி இருக்கும் நிலையில், அந்த படம் 300 கோடி வசூலை கடந்தாலே வெற்றிப் படம் தான் என்றும் அதை அசால்ட்டாக கடக்கும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X