கலைப்புலி தாணுவுக்கு விஜய் பண உதவி செய்தாரா?

By Mayura Akilan

Vijay
துப்பாக்கி திரைப்பட சூட்டிங்கின் போது தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கு பண நெருக்கடி ஏற்பட்டதாம் அப்போது படத்தின் ஹீரோ விஜய்தான் பண உதவி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரமாண்டமான தயாரிப்பாளர் என்று பெயரெடுத்தவர் எஸ்.தாணு. விளம்பரங்களுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் இன்று வரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. யார் படத்தில் தொடங்கி இப்போது வெளிவர இருக்கும் துப்பாக்கி படம் வரை அவரது பிரமாண்டம் தொடர்கிறது.

துப்பாக்கிப் படம் தலைப்பில் ஏற்பட்ட சிக்கலினால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இப்போது அந்த சிக்கல் தீர்ந்துவிட்டது. இருப்பினும் படத்தை பற்றி வெளிவராத தகவல் ஒன்று இருக்கிறதாம்.

துப்பாக்கி படம் துவங்கிய பிறகு தாணுவுக்கு நிதி நெருக்கடி வந்ததாம். தாணுவின் நிலையை புரிந்து கொண்டு அவரை வரவழைத்து ரூபாய் எதுவும் நிரப்பப்படாத காசோலை ஒன்றை கொடுத்து எவ்வளவு வேண்டுமோ எடுத்து கொள்ளுங்கள் என்றாராம். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லையாம் தாணு.

இது உண்மைதானா என்று தாணுவைக் கேட்டால் ஆம் என்கிறார் அவர். ரஜினியைப் போல விஜய்யும் தயாரிப்பாளரின் சிரமத்தை உணர்ந்து உதவிபுரியும் மனம் கொண்டவர் என்றார் தாணு.

சிவாஜி படத்தில் ரஜினி நடித்த போது வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே வாங்கி கொண்டு நடித்தார். படம் வெளிவந்து வெற்றி பெற்ற பிறகுதான் தனக்குரிய சம்பளத்தை பெற்றுக்கொண்டார். அதேபோல விஜய்யும் தனக்கு உதவி புரிந்துள்ளார் என்று சொல்லாமல் சொல்கிறார் தாணு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X