அது சுயநலமில்லையா?.. சூப்பர் ஸ்டாரையும் மறைமுகமாக அட்டாக் செய்த விஜய்.. கடுப்பான ரஜினி ரசிகர்கள்!
சென்னை: நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். 4 மணிக்கு ஆரம்பித்து ரேம்ப் வாக் செய்து ஓடி வந்த விஜய் கட்சிக் கொடி ஏற்றி கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் ஒரு சிலரை பேச வைத்து விட்டு உடனடியாக மைக்கை எடுத்துப் பேச ஆரம்பித்தார். 6.30 மணிக்கெல்லாம் ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் முடித்து விட்டு ஆடியோ லான்ச்சை விட குறைவான நேரத்தில் புல்லட் பாயின்ட்டுகளாக சொல்ல வந்த கருத்துக்களையும், தாக்க நினைத்த கட்சிகளையும் அட்டாக் மோடில் செம ஆவேசமாக பேசி மக்களை எப்படி உணர்ச்சி பொங்க வைக்க முடியுமோ அவை அனைத்தையும் செய்து விட்டார்.
சொல் அல்ல செயல் தான் முக்கியம் என விஜய் எப்படி பேசினாரோ அதே போலத்தான் விஜய்யின் செயல்களையும் தவெக நிர்வாகிகளின் செயல்களையும் பார்த்து தான் அனைத்து தொகுதிகளிலும் அவர்களுக்கு ஆதரவு தரலாமா? வேண்டாமா என மக்கள் முடிவு செய்வார்கள்.

யார் ஓட்டுப்போட்டாலும் ரஜினிகாந்த் ரசிகர்கள் நிச்சயம் விஜய்க்கும் அவரது கட்சிக்கும் ஓட்டுப் போட மாட்டார்கள் என்றும் மாநாட்டிலும் சுயநலமில்லையா? என மறைமுகமாக சூப்பர் ஸ்டாரை தாக்கி விஜய் பேசி விட்டார் என ரஜினி ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர்.
அரசியலுக்கு வராத ரஜினிகாந்த்: இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை என பேசி விட்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரேவசம் செய்வேன் என்றார். அதன் பின்னர், இப்பவும் இல்லை. எப்பவும் இல்லை என பல வருடங்களாக ஒவ்வொரு படம் வெளியாகும் சமயத்திலும் அரசியலுக்கு வரப்போவதாக பில்டப் கொடுத்து விட்டு அரசியலுக்கு கடைசியாக உடல்நலத்தை காரணம் காட்டி வரமுடியாது எனக் கூறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், தொடர்ந்து சினிமாவில் மட்டும் எப்படி நடித்து வருகிறார் என்கிற விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.
சுயநலமில்லையா?: இந்த அரசியல் எல்லாம் நமக்கு எதுக்குங்க, நாம பாட்டுக்கும் நடிச்சோமா, நாலு காசு பார்த்தோமான்னு இருக்கலாம்னு தான் ஆரம்பத்தில் நானும் நினைச்சேன். ஆனால், நாம மட்டும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறது சுயநலமில்லையா? நம்மள வாழ வச்ச இந்த மக்களுக்கு ஏதாவது செய்யணுமில்லையா? நிறைய காசு சம்பாதிச்சு என்ன செய்யப் போறோம். நம்ம மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என ஏகப்பட்ட கேள்விகள் வந்தது. அதற்கான பதிலாகத்தான் அரசியலில் களமிறங்குவது என்கிற முடிவை எடுத்தேன் என விஜய் பேசினார்.
கடுப்பான ரசிகர்கள்: மோசமான ஹாஷ்டேக்குகளை விஜய்க்கு எதிராக தொடர்ந்து ரஜினிகாந்த் ரசிகர்களும் விஜய் ஹேட்டர்களும் பதிவிட்டு வரும் நிலையில், நடிகர் விஜய்யின் சுயநலப் பேச்சு சூப்பர் ஸ்டாரை நேரடியாக தாக்குவதாக விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வரும் நிலையில், அதற்கு எதிராக ரஜினிகாந்த் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











