வள்ளுவர் கோட்டம் பற்றி விஜய் பேச என்ன காரணம்.. ஓஹோ 'பராசக்தி' கண்காட்சி அதுதான் மேட்டரா?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய விஜய் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சனிக்கிழமை சென்று மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் செய்து வந்தார். கரூரில் கடைசியாக நடைபெற்ற ரோடு ஷோவில் ஏகப்பட்ட பொதுமக்கள் அதீத கூட்ட நெரிசல் காரணமாக மிதிப்பட்டு உயிழிழந்தனர்.
41 உயிர்கள் பரிதாபமாக கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான நிலையில், விஜய்யின் சனிக்கிழமை பிரச்சாரம் தடைபட்டது. இந்நிலையில், மீண்டும் ஈரோட்டில் மக்களை சந்தித்து இன்று பேசியுள்ளார் விஜய். முன்னதாக தமிழ்நாட்டை தாண்டி பாண்டிச்சேரியில் தனது பிரச்சாரத்தை உரிய பாதுகாப்புடன் நடத்தினார் விஜய்.

ஈரோட்டில் மக்களை சந்தித்து விஜய் பேசும் போது திமுகவினருக்கு "வள்ளுவர் கோட்டத்துக்கு காட்டுற அக்கறையை என பேசியது சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இன்று மாலை சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் கண்காட்சி வள்ளுவர் கோட்டத்தில் தான் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜன நாயகன் vs பராசக்தி: ஒரு பக்கம் தவெக vs திமுக மோதலை எதிர்கொண்டு வரும் விஜய். இன்னொரு பக்கம் பராசக்தி vs ஜன நாயகன் மோதலையும் எதிர்கொண்டு வருகிறார். தனது கடைசி படமான ஜன நாயகன் படத்துக்கு செக் வைக்கும் விதமாக சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தையும் பொங்கல் வெளியீடாக கொண்டு வந்துள்ள நிலையில், இன்று ஜன நாயகன் செகண்ட் சிங்கிள் மற்றும் பராசக்தி படத்தின் கண்காட்சி என இரு நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன.
வள்ளுவர் கோட்டத்துக்கு காட்டுற அக்கறையை: தவெக தலைவர் விஜய் என்ன திடீர்னு ஜன நாயகன் விஜய்யாக மாறிவிட்டாரே என சோஷியல் மீடியாவில் பலரும் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். அதற்கு காரணம் ஈரோட்டில் பேசும்போது திடீரென விஜய், "வள்ளுவர் கோட்டத்துக்கு காட்டுற அக்கறையை.. இங்கே மக்களின் வாழ்வாதாரத்துக்கு காட்டலையே" என திமுகவை விமர்சித்தது தான்.
பராசக்தி படம் மீது பொறாமை?: வள்ளுவர் கோட்டத்தில் டிசம்பர் 18ம் தேதியான இன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படத்தின் 1960 கண்காட்சி நடைபெறவிருக்கிறது. மேலும், பராசக்தி படம் உருவாக காரணமான கதையின் 10 நிமிட காட்சிகளும் வெளியாக உள்ளன. டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படத்தை இன்பன் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட உள்ள நிலையில், தான் விஜய் இப்படி பேசியுள்ளார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











