twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செய்தியாளர்களை கடத்தினார்களா விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள்? ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்வீட்

    |

    சென்னை: செய்தியாளர்களை விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் கடத்தி விட்டனர் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ப்ளூ சட்டை மாறன் அதுதொடர்பான ட்வீட்களை போட்டு வருகிறார். மேலும், சீமான் செய்தி சேனலுக்கு அளித்த கண்டன பேட்டியும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

    வாரிசு படம், அரசியல் என்ட்ரி, காலில் விழும் கலாச்சாரம் என தொடர்ந்து நடிகர் விஜய்யை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

    காலில் விழும் நிர்வாகிகள்..டென்ஷன் ஆன விஜய்...புஸ்ஸி ஆனந்திற்கு செம டோஸ்!காலில் விழும் நிர்வாகிகள்..டென்ஷன் ஆன விஜய்...புஸ்ஸி ஆனந்திற்கு செம டோஸ்!

    வாரிசும் சிக்கலும்

    வாரிசும் சிக்கலும்

    டோலிவுட் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தையும் நடிகர் விஜய்யையும் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. தியேட்டர் கிடைப்பதில் சிக்கல், படம் தள்ளிப் போகுமா என்கிற கேள்வி மற்றும் வாரிசு படக் காட்சிகள் லீக் என இந்த முறை பிரச்சனைகள் அடுத்தடுத்து உருவாகி வருகின்றன.

    பனையூரில் பிரியாணி விருந்து

    பனையூரில் பிரியாணி விருந்து

    இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை பனையூரில் தனது மன்ற நிர்வாகிகளை அழைத்து நடிகர் விஜய் பிரியாணி விருந்து அளித்திருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் அரசியல் தொடர்பாகவும், வாரிசு பட சிக்கல் தொடர்பாகவும் பேசப்பட்டதாக தகவல்கள் லீக் ஆகி உள்ளன. பெற்றவர்களை பாதுகாப்பதே முதல் கடமை என விஜய் அட்வைஸ் செய்ததாக வெளியே வந்த ரசிகர்கள் பேட்டியளித்தனர்.

    கடவுளை பார்த்த மாதிரி

    கடவுளை பார்த்த மாதிரி

    மேலும், பிரியாணி செம டேஸ்ட் என்றும் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்த போது கடவுளை பார்த்த மாதிரி இருந்தது என்றும் ரசிகர்கள் சிலாகித்த வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன. அதே நேரம் புஸ்ஸி ஆனந்த் காலில் ரசிகர்கள் விழும் காட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பின. நடிகர் விஜய்யும் அதனால் அப்செட் ஆகி அவரை எச்சரித்துள்ளார் என கூறப்படுகிறது.

    செய்தியாளர்கள் கடத்தல்

    செய்தியாளர்கள் கடத்தல்

    இந்நிலையில், விஜய் மக்கள் நிர்வாகிகள் சிலர் செய்தியாளர்களை காரில் கடத்திச் சென்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பான ட்வீட்களையும் செய்திகளையும் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். விஜய் ரசிகர்கள் செய்தியாளர்களை கடத்தவில்லை என விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

    சீமான் கண்டனம்

    சீமான் கண்டனம்

    நடிகர் விஜய்யின் வாரிசு படத்திற்கு தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் குறைவான தியேட்டர்களை ஒதுக்குவது போன்ற தீர்மானத்தை எதிர்த்து விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த சீமானிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இந்த தகவல் அதிர்ச்சியளிக்கிறது என்றும் அப்படி நடந்திருந்தால் அது கண்டனத்துக்குரியது என்றும் தனது கருத்தை கூறினார்.

    வாரிசு லீக்

    வாரிசு லீக்

    வாரிசு காட்சிகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் லீக் ஆகி வருகின்றன. இந்நிலையில், செய்தியாளர்கள் சிலர் ட்ரோன் மூலம் வாரிசு படப்பிடிப்பில் நடக்கும் விஷயங்களை படமாக்க நினைத்தனர் என்றும் அதனால் தான் அவர்களை விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் அழைத்து எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு திடீரென செய்தியாளர்கள் அப்படி நடந்து கொள்ள என்ன காரணம் என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

    கடத்தவில்லை

    கடத்தவில்லை

    வாரிசு படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கும் இடத்தில் ட்ரோன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர் என்றும் அதன் காரணமாகவே அவர்களை அழைத்து இப்படி பண்ணாதீங்க என விஜய் ரசிகர்கள் மன்ற நிர்வாகி ஈசிஆர் சரவணன் அறிவுறுத்தினார் என்றும் விஜய் ரசிகர்கள் அந்த கடத்தல் சம்பவத்துக்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டால் தான் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Some News Media persons using drone cameras at Vijay's Varisu shooting spot which happened in Chennai. Vijay Makkal Iyakkam warned that media persons for using drone camera's news trending in social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X