வாழ்த்துக்கு நன்றி சொன்ன ஷாந்தனு.. டிவிட்டரில் இணைந்தாரா விஜயின் மகள்? குழப்பத்தில் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் ஷாந்தனு பாக்யராஜூக்கு டிவிட்டரில் வாழ்த்து சொன்னது நடிகர் விஜயின் மகளா என குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் ரசிகர்கள்.

Recommended Video

எங்க அப்பா வாசிக்க SIMBU ஆட | VJ LOKESH CHAT | FILMIBEAT TAMIL

நடிகர் ஷாந்த்னு பாக்யராஜ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் அவரது காமன் டிபியை வெளியட்டு பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

சமூக வலைதளங்களிலும் #HBDShanthnu என்ற ஹேஷ்டேக் ட்ரென்டிங்கில் உள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மாஸ்டர் படம்

மாஸ்டர் படம்

நடிகர் ஷாந்தனு விஜயின் தீவிர ரசிகர் ஆவார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப் போகிறது. அதேநேரத்தில் வேறு சில படங்களிலும் நடித்து வருகிறார் ஷாந்தனு.

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து

இந்நிலையில் திவ்யா சாஷா என்ற விஜய் மகள் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில் ஷாந்தனுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த டிவிட்டில் பிறந்த நாள் வாழ்த்துகள் அங்கிள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜயின் மகளா?

விஜயின் மகளா?

அந்த டிவிட்டுக்கு நடிகர் ஷாந்தனு நன்றி தெரிவித்துள்ளார். இதனால் அந்த ட்விட்டர் கணக்கு உண்மையிலேயே விஜயின் மகளுடையதுதானா? அல்லது வேறு யாராவதா என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இருப்பினும் அவரது இந்த டிவிட்டை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

ஷோபாவுக்கு வாழ்த்து

ஷோபாவுக்கு வாழ்த்து

அதே நேரத்தில் பலரும் இது போலியான ஐடி என கூறி வருகின்றனர். முன்னாதாக ஷோபா சந்திரசேகரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கும் இந்த ஐடியில் இருந்து பிறந்து நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரசிகர்கள் கோரிக்கை

ரசிகர்கள் கோரிக்கை

இதற்கு முன்பு நடிகர் விஜய் மகன் சஞ்சய் பெயரில் டிவிட்டர் கணக்குகள் இருந்தன. ஆனால் அவை போலியானவை என விளக்கம் தரப்பட்டது. இந்நிலையில் தற்போது விஜயின் மகள் பெயரில் டிவிட்டரில் கணக்கு உள்ளது. இது குறித்தும் விஜய் தரப்பில் இருந்து யாராவது விளக்கம் அளித்து போலியானதா என உறுதிப்படுத்த வேண்டும் என்கின்றனர் ரசிகர்கள்.

Read more about: vijay shanthanu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X