உதயநிதிக்கு சைலன்ட்டாக செக் வைத்த விஜய்.. ஒரே ஒரு போஸ்டர்.. ஒட்டுமொத்த மாமன்னன் டிரெய்லரும்!

சென்னை: உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என சொல்லப்படும் மாமன்னன் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், திடீரென லோகேஷ் கனகராஜின் ட்வீட்டும் அதை தொடர்ந்து வெளியான லியோ போஸ்டரும் மாமன்னன் டிரெய்லர் டிரெண்டிங்கை டோட்டலாக காலி செய்தது.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் ஃபாசில் நடிப்பில் உருவாகி உள்ள மாமன்னன் படத்தின் டிரெய்லர் இசை வெளியீட்டு விழாவில் வெளியாகாமல் நேற்று பிரத்யேகமாக வெளியானது.

Did Vijay silently encountering Udhayanidhi Stalin with Leo Alter Ego song poster?

ஆனால், அந்த டிரெய்லருக்கு சைலன்ட்டாக நடிகர் விஜய் செக் வைத்து விட்டார் என சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய விவாதமே ஓடிக் கொண்டிருக்கிறது.

மாணவர்களை சந்திக்கு விஜய்: நடிகர் விஜய் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களில் தேர்வாகி வெற்றிப் பெற்ற மாணவர்களை இன்று சந்தித்து அவர்களை பாராட்டி ஊக்கத்தொகையும் கொடுக்க உள்ளார்.

இந்த நிகழ்வே அவரது அரசியல் என்ட்ரிக்கான அடித்தளமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்றே உதயநிதிக்கு செக் வைத்து தனது அரசியல் ஆட்டத்தை விஜய் தொடங்கி விட்டார் எனக் கூறுகின்றனர்.

Did Vijay silently encountering Udhayanidhi Stalin with Leo Alter Ego song poster?

உதயநிதிக்கு செக் வைத்தாரா விஜய்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் டிரெய்லர் நேற்று வெளியானது. அது தொடர்பான முன் அறிவிப்புகளும் சில நாட்களாகவே அறிவிக்கப்பட்டு இருந்தன.

ஆனால், திடீரென நடிகர் விஜய்யின் லியோ படத்தின் ஆல்டர் ஈகோ பாடல் குறித்த அறிவிப்பு போஸ்டர் நேற்று வெளியான நிலையில், டாப் டிரெண்டிங்கில் லியோ தான் இடம்பெற்றிருந்தது. மாமன்னன் டிரெய்லர் வந்த சுவடே தெரியாமல் அப்படியே அடங்கிப் போய்விட்டது என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

ஒரே ஒரு போஸ்டர்: நடிகர் விஜய் வாயில் சிகரெட்டை வைத்துக் கொண்டு, ஏகப்பட்ட பீர் கிளாஸ்களுடன் 2000 டான்ஸர்கள் இருக்கும் சர்ச்சைக்குரிய போஸ்டர் வெளியான உடனே மாமன்னன் படத்தின் டிரெய்லரே எடுபடாமல் போய் விட்டது.

Did Vijay silently encountering Udhayanidhi Stalin with Leo Alter Ego song poster?

நடிகர் விஜய் உதயநிதி ஸ்டாலினுக்காக பார்த்திருந்தால், நேற்று அந்த போஸ்டர் அறிவிப்பை வெளியிட்டு இருக்க மாட்டார் என்றும் கூறுகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் சேஃப்: மாமன்னன் படத்தின் டிரெய்லரை பின்னுக்குத் தள்ளிவிட்டு விஜய்யின் ஆல்டர் ஈகோ நான் ரெடி பாடலின் போஸ்டர் டிரெண்டாகி வருவதை கவனித்த லோகேஷ் கனகராஜ் தான் சேஃப் ஆகி விட வேண்டும் என்பதற்காகத்தான் மாமன்னன் டிரெய்லரை பாராட்டி ட்வீட் போட்டார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X