பிரதீப் ரங்கநாதன் ரூட்டை எடுக்கப் போறாரா விஜய் மகன்.. சிக்மா படத்தில் கேத்தரின் தெரசாவுடன் ஆட்டம்?

சென்னை: தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகாமல் இயக்குநராக அறிமுகமாகப் போகிறார். சந்தீப் கிஷனை ஹீரோவாக வைத்து ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள படத்திற்கு 'சிக்மா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஜேசன் சஞ்சயின் முதல் படம் என்றே லைகா இந்த படத்தை புரொமோட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடிகை கேத்தரின் தெரசாவுடன் இணைந்து ஜேசன் சஞ்சய் குத்தாட்டம் போடப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Did VIjay Son Jason Sanjay will take Pradeep Ranganathan route

ஃபர்ஸ்ட் சிங்கிளாக கூட இந்த பாடல் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஷாருக்கான் மகனை போல: பாலிவுட்டில் ஷாருக்கான் மகன் இயக்குநராக அறிமுகமாகி பேட்ஸ் ஆஃப் பாலிவுட் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக இயக்கி வெளியிட்டார். இந்நிலையில், அடுத்த ஆண்டு விஜய்யின் கடைசி படமும் ஜேசன் சஞ்சயின் முதல் படமும் வெளியாகும் என தெரிகிறது. படத்தின் அனைத்து வேலைகளையும் ஜேசன் சஞ்சய் முடித்து விட்டார் என்றும் இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Did VIjay Son Jason Sanjay will take Pradeep Ranganathan route

கேத்தரின் தெரசாவுடன் குத்தாட்டம்: ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் படத்தில் தமன்னா குத்தாட்டம் போட்டதை போல தற்போது ஜேசன் சஞ்சய் படத்தில் மெட்ராஸ், கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் நடித்த கேத்தரின் தெரசா குத்தாட்டம் ஆடப் போவதாகவும், அந்த பாடலில் அவருடன் சேர்ந்து ஜேசன் சஞ்சய் டான்ஸ் ஆடப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரதீப் ரங்கநாதன் ரூட்டில் ஜேசன் சஞ்சய்: இயக்குநராக ஆகப் போகிறேன் என அறிவித்து முதல் நாள் ஷூட்டிங்கில் இருந்து படம் முடியும் வரையிலும் பல பிரபலங்களும் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றும் தமிழ் சினிமாவில் விஜய் இடத்தை அவர் தான் நிரப்ப வேண்டும் என பலரும் கூறி வரும் நிலையில், பிரதீப் ரங்கநாதனை போல ஒரு படத்தை இயக்கி சினிமாவில் கால்பதித்து விட்டு, அதன் பின்னர், ஹீரோவாக நடிக்கப் போகிறாரா? என்றும் கோமாளி படத்தில் ஆட்டோ டிரைவராக பிரதீப் நடித்து தலை காட்டியது போல சிக்மா படத்தில் டான்ஸ் ஆடி ரசிகர்களிடம் ரெஸ்பான்ஸ் எப்படி கிடைக்கிறது என்பதை பார்க்கப் போகிறாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X