தளபதி 66 படத்தின் கதை அப்போ அதுதானா? சன் டிவி பேட்டியில் விஜய் சொன்ன சீக்ரெட்.. வைரலாகும் புரமோ!

சென்னை: வரும் ஏப்ரல் 9ம் தேதி சன் டிவியில் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் நெல்சன் பங்கேற்கும் பிரத்யேக பேட்டி ஒளிபரப்பாக உள்ளது.

பீஸ்ட் படத்திற்காக சன் டிவி செய்யப் போகும் ஒரே புரமோஷன் இதுதான் என்கின்றனர்.

தொடர்ந்து வெளியாகி வரும் புரமோக்களில் இயக்குநர் நெல்சன் கேட்கும் கேள்விகளுக்கு நடிகர் விஜய் பதில் அளித்து வருகிறார். அப்படியொரு கேள்விக்கு விஜய் பதிலளிக்கும் போது தளபதி 66 படத்தின் கதையை ரிவீல் செய்துள்ளாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

விஜய் பேட்டி

விஜய் பேட்டி

10 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய்யின் சிறப்புப் பேட்டி சன் டிவியில் வெளியாகிறது. வரும் ஏப்ரல் 9ம் தேதி இரவு 9 மணிக்கு இந்த பேட்டி ஒளிபரப்பாக உள்ளது. சர்க்கார் படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவை நடத்திய சன் பிக்சர்ஸ் இந்த முறை வெறும் பேட்டியுடன் பீஸ்ட் புரமோஷனை முடித்துக் கொண்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

போட்டு வாங்கும் நெல்சன்

போட்டு வாங்கும் நெல்சன்

வீட்டில் 3 கார்கள் இருக்க ஏன் ஓட்டுப் போட சைக்கிளில் வந்தீங்க உள்ளிட்ட ஏகப்பட்ட கேள்விகளை விஜய்யிடம் கேட்டு இயக்குநர் நெல்சன் போட்டு வாங்கும் படியாக இந்த பேட்டி அமைந்துள்ளது. நடிகர் விஜய்க்கு விருப்பமே இல்லாமல் தான் இப்படியொரு பேட்டியை கொடுத்திருக்கிறார் என்றும் நெட்டிசன்கள் அவரது ரியாக்‌ஷன்களை வைத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

தளபதி மிஸ்ஸிங்

தளபதி மிஸ்ஸிங்

சன் டிவியின் இந்த பேட்டிக்கு விஜய்யுடன் நேருக்கு நேர் என டைட்டில் வைத்துள்ளனர். தளபதி விஜய் என்பதை சன் டிவி வேண்டுமென்றே நீக்கியுள்ளதாக விஜய் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். மேலும், இதற்கு மேல் நடிகர் விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எந்தவொரு படத்திலும் நடிக்கக் கூடாது என்கிற கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர்.

தளபதி 66 கதை

தளபதி 66 கதை

இந்த பேட்டியில் நடிகர் விஜய் பேசும் போதும், பீஸ்ட் விஜய்யாக இருப்பதா? அல்லது பூவே உனக்காக விஜய்யாக இருப்பதா? என்பதை சூழ்நிலை தான் முடிவு செய்யும் என நடிகர் விஜய் பேசியுள்ளார். ஏற்கனவே தளபதி 66 படத்தின் இயக்குநர் வம்சியும் பூவே உனக்காக படத்தை வைத்தே பேசியிருந்தார். நடிகர் விஜய் ஏகப்பட்ட காதல் படங்களில் நடித்து இருந்தாலும், மீண்டும் மீண்டும் பூவே உனக்காக படம் ரெஃபரன்ஸ் வரும் நிலையில், அது போன்ற ஒரு காதல் படமாகத்தான் தளபதி 66 இருக்கும் என நெட்டிசன்கள் கெஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X