The Greatest of All Time: ஹைஜேக் மன்னன் D.B. Cooper-ன் வாழ்க்கைப் படமா தளபதி 68?.. செம மேட்டர்!

சென்னை: அஜித்துக்கு மங்காத்தா படத்தை கொடுத்த வெங்கட் பிரபு விஜய்க்கும் அப்படியொரு அட்டகாசமான படத்தைக் கொடுக்க ரெடியாகி விட்டாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தளபதி 68 படத்துக்கு The Greatest of All Time - GOAT என சுருக்கமாக டைடிட்ல் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தில் ஃபைட்டர் பிளைட்டாக எல்லாம் இல்லாமல் FBI கண்ணிலே இன்று வரை விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் ஒரு ஹைஜேக் மன்னன் D.B. Cooper ன் கதை தானா என்கிற கேள்வியை ஃபர்ஸ்ட் லுக் கொடுத்திருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்தே தளபதி 68 படம் ஹாலிவுட் படங்களின் ரீமேக்கா என்கிற கேள்வி எழுந்து வந்த நிலையில், ஃபர்ஸ்ட் லுக் தற்போது அதற்கான ஹெவியான அச்சாரத்தை செம ஸ்ட்ராங்காக போட்டுள்ளது.

Did Vijays The Greatest of All Time based on Mystery Man D.B. Cooper?

அப்போ ஃபேமிலி என்டர்டெயினர் இல்லையா?: தளபதி 68 படத்தின் பூஜையை பார்த்தால் நடிகர் விஜய் பூவே உனக்காக, பிரியமானவளே, சூர்யவம்சம் போல ஒரு ஃபேமிலி டிராமா படத்தைக் கொடுக்கப் போகிறார் என்றே பலரும் நினைத்தார்கள். அந்தளவுக்கு டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, சினேகா, மீனாக்‌ஷி சவுத்ரி என காஸ்டிங்கே புதுவிதமாகவும் கலர்ஃபுல்லாகவும் இருந்தது. ஆனால், தற்போது அந்த எண்ணம் டோட்டலாக மாறிவிட்டது.

ஹாலிவுட் ரீமேக்கா?: வில் ஸ்மித் நடித்த ஜெமினி மேன் படத்தின் ரீமேக் தான் தளபதி 68 என சொல்லப்பட்டது. மேலும், சில ஹாலிவுட் படங்களின் பெயர்களும் அடுக்கப்பட்டு வந்த நிலையில், அதற்கேற்ப படத்தின் ஷூட்டிங் தாய்லாந்த், ஹைதராபாத் மற்றும் தற்போது இலங்கை என போய்க் கொண்டிருக்கிறது.

Did Vijays The Greatest of All Time based on Mystery Man D.B. Cooper?

டி.பி. கூப்பர் பயோபிக்கா?: மங்காத்தா படத்தில் எப்படி அஜித் பெரிய பணத்தைக் கொள்ளையடித்து கடைசி வரை யாருக்கும் தெரியாமல் தப்பிக்கிறாரோ அதை விட பயங்கரமான ரியல் லைஃப் ஸ்டோரி தான் இந்த ஹைஜேக் மன்னன் டி.பி. கூப்பரின் கதை. அதைத்தான் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்கிற பெயரில் விஜய்யை வைத்து டபுள் ஆக்‌ஷனில் எடுத்து மிரட்டக் காத்திருக்கிறாரா வெங்கட் பிரபு என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஹைப்பை எகிற விட்டு வருகின்றனர்.

யார் இந்த டி.பி. கூப்பர்?: 1971ம் ஆண்டு கட்டுக் கட்டாக பணத்தை திருடி விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குடித்த டி.பி. கூப்பர் அப்படியே மாயமாகி விட்டார். இதுவரை அவரை FBIயால் கூட கண்டுப்பிடிக்க முடியவில்லை என்கின்றனர். அப்படிப்பட்ட நபரின் கதையை கருவாக கொண்டு இந்த படத்தை ஹாலிவுட் தரத்தில் உருவாக்கி வருகிறாரா வெங்கட் பிரபு என்கிற கேள்வி எழுந்துள்ளது. கூடிய சீக்கிரமே படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்டும் வர வர என்ன மாதிரியான பிரம்மாண்ட படம் என்பது தெரிந்து விடும். ஃபர்ஸ்ட் லுக்கை பொறுத்தவரையில் ஆகாயத்தில் விமானம் தரையில் அப்பா மகன் விஜய் பாராசூட்டில் இருந்து இறங்குவது போல காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிஜி சொதப்பல்கள் எல்லாம் இல்லாமல் லியோவில் ஹைனாவை உருவாக்கியது போல இந்த படத்தில் ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள நிலையில், தரமான சம்பவம் கன்ஃபார்ம் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X