Leo Success Meet: லியோ வெற்றி விழாவுக்கு விஜய்யின் மனைவி, மகன் வருவாங்களா?.. எகிறும் எதிர்பார்ப்பு!
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 500 கோடி வசூலை தாண்டி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முறியடித்ததா? இல்லையா? உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும் நாளை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள லியோ வெற்றி விழாவில் விடை கிடைக்கும் என தெரிகிறது.
இந்நிலையில், அந்த வெற்றி விழாவுக்கு நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் சினிமா இயக்குநராக அறிமுகமாக உள்ள மகன் ஜேசன் சஞ்சய் இருவரும் வருகை தருவார்களா? என்கிற கேள்வி தற்போது சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.

விஜய் வருவாரா?: லியோ படத்தின் எந்தவொரு புரமோஷனுக்கும் நடிகர் விஜய் கலந்து கொள்ளாத நிலையில், லியோ படத்தின் வெற்றி விழாவுக்கு நடிகர் விஜய் பங்கேற்பாரா? என்கிற கேள்வியே முதற்கட்டமாக எழுந்துள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் லியோ வெற்றி விழா குறித்த அறிவிப்பை வெளியிடாத நிலையில், இன்று அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமல், ரஜினி பங்கேற்பு?: லியோ படத்திலேயே கமல் அப்பியரன்ஸ் இருந்த நிலையில், லியோ வெற்றி விழாவில் உலகநாயகன் கமல் பங்கேற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும், லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தலைவர் 171 படத்தை இயக்க உள்ள நிலையில், ரஜினிகாந்த் கலந்து கொள்வாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. ஆனால், நடிகர் விஜய்யின் லியோ பட வெற்றி விழா என்பதால் விஜய் பங்கேற்றால் வேறு பெரிய நடிகர்கள் யாரும் பங்கேற்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
மனைவி, மகன் பங்கேற்பார்களா?: இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் விஜய்க்கும் பிரச்சனை, த்ரிஷாவுக்கும் விஜய்க்கும் பிரச்சனை, விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதா மற்றும் மகன் ஜேசன் சஞ்சய்க்குமே பிரச்சனை என லியோ படத்தின் வசூல் குறித்த நெகட்டிவிட்டியை விட டைரக்ட் அட்டாக் அதிகமாக இருந்தது. இந்நிலையில், அனைத்து வதந்திகளுக்கும் லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் முற்றுப்புள்ளி வைப்பாரா என்கிற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியிலேயே எழுந்துள்ளது.
அடுத்த சர்ச்சை ரெடி: இது ஒரு பக்கம் இருக்க லியோ வெற்றி விழாவை வைத்து மேலும், பல புதிய சர்ச்சைகளை கிளப்ப ரஜினிகாந்த் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் இன்னொரு பக்கம் ரெடியாகி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











