ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் இருந்து வெளியேறினாரா விஷ்ணு விஷால்? இப்படியொரு ட்வீட் போட்டுருக்காரே!
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தில் இருந்து விஷ்ணு விஷால் வெளியேறப்போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் தீயாய் பறந்து வரும் நிலையில், திடீரென விஷ்ணு விஷால் போட்டுள்ள ட்வீட் அவர் அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டாரா என்கிற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்படுகிறார் என தகவல்கள் வெளியான நிலையில், விஷ்ணு விஷாலே அது தொடர்பான சிக்னலை சோஷியல் மீடியாவில் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், விஷ்ணு விஷாலும் அப்படியொரு சிக்னலை கொடுத்துள்ளார் என்றே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ராட்சசன் விஷ்ணு விஷால்
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஷ்ணு விஷால், நீர்ப்பறவை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அவர் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் இந்தியளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதன் பிறகு விஷ்ணு விஷால் வாழ்வில் நடந்த சில பிரச்சனைகள் காரணமாக சறுக்கல்கள் வந்தாலும் மீண்டும் எழுந்து எஃப்ஐஆர், கட்டா குஸ்தி என ஹிட் படங்களை கடந்த ஆண்டு கொடுத்தார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில்
கட்டா குஸ்தி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து நடித்து வரும் இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு கேமியோவாக நடிக்கப் போகிறார் என அறிவித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

திடீர் சிக்கல்
பெரிய புராஜெக்ட்டாக லைகா நிறுவனம் தயாரிப்பில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பில் பல சிக்கல்கள் கிளம்பி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், ஹீரோ விஷ்ணு விஷாலே படத்தில் இருந்து வெளியேற போவதாக சமீப காலமாக பேச்சுக்கள் அடிபட்டன. இந்நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் விஷ்ணு விஷாலின் லேட்டஸ்ட் ட்வீட் உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

விலகினாரா விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், "You got to stand for your own self.. No one will....." என்கிற கேப்ஷனுடன் தனது புகைப்படத்தை தற்போது பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் அப்போ அந்த விஷயம் உண்மை தானா அதற்கான பதிவாக இதை போட்டுள்ளாரா விஷ்ணு விஷால் என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் அல்லது விளக்கம் வெளியாகும் என எதிர்பார்ப்போம்.

விக்னேஷ் சிவனை தொடர்ந்து
லைகா நிறுவனத்தில் உருவாக உள்ள அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது நடிகர் விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தில் இருந்து வெளியேறி விட்டாரா என கோடம்பாக்கமே ஷாக் ஆகி உள்ளது.

சிசிஎல்
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில் சினிமா நடிகர்களுடன் இணைந்து விஷ்ணு விஷாலும் விளையாடி வருகிறார். அதில், ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், அது தொடர்பான போட்டோக்களையும் தனது சோஷியல் மீடியா பக்கங்களில் விஷ்ணு விஷால் ஷேர் செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











