ஓப்பனிங் சீன்...தியேட்டரில் இளம் ஹீரோவை பார்த்து தலைவான்னு கத்திய விஜய்
சென்னை : விஜய்யின் 47 வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சோஷியல் மீடியாக்களில் விஜய்க்கு வாழ்த்துக்களை அள்ளி குவித்தனர். மற்றொரு புறம் ஹேஷ்டாக், ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் என சோஷியல் மீடியா முழுவதும் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டமாக தான் இருந்தது.
Recommended Video
விஜய் தற்போது நடித்து வரும் புதிய படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனமோ தளபதி 65 படத்தின் டைட்டில், ஃபஸ்ட்லுக் வெளியிட்டு விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடியது. சில மணி நேர இடைவெளியில், பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் இரண்டாவது லுக்குகளை அடுத்தடுத்து வெளியிட்டு மாஸ் காட்டி விட்டது சன் பிக்சர்ஸ்.

ட்விட்டரில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்
ட்விட்டர் ஸ்பேசில் டிடி தொகுத்து வழங்கிய விஜய் பிறந்தநாள் சிறப்பு நிகழ்வில் லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன், அனிருத், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விஜய் மீதான தங்களின் அன்பையும், அவருடன் பணியாற்றிய அனுபவங்களையும் பகிர்ந்தனர்.

ரகசியத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன்
அப்போது மாளவிகா மோகனன் வெளியிட்ட தகவல் ஒன்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. மாளவிகா மோகனன், விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்தார். அப்போது நடந்த, யாருக்கும் தெரியாத ரகசியத்தை கூறியதும் அனைவரும் வாயடைத்து போயினர்.

தியேட்டரில் தலைவான்னு கத்திய விஜய்
அவர் கூறுகையில், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது படக்குழுவை சேர்ந்த சிலர் டெல்லியில் தியேட்டர் ஒன்றில் டைகர் ஷெராஃப் நடித்த பாகி 3 படம் பார்க்க போயிருந்தோம். அப்போது டைகர் ஷெராஃபின் என்ட்ரி சீனின் போது விஜய், தலைவா என சத்தம் போட்டார்.

விஜய் யாரோட ஃபேன் தெரியுமா
உலகம் முழுவதிலும் இருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் விஜய்யை தலைவா என கூறி, கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ டைகர் ஷெராஃப்பை, அதுவும் தியேட்டரில் வைத்து தலைவா என சத்தம் போட்டார். இது பற்றி அவரிடம் கேட்ட போது, நான் டைகரின் மிகப் பெரிய ஃபேன். அவரது நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது என்றார் விஜய் என கூறினார் மாளவிகா.

சர்ப்ரைசான விஜய் ரசிகர்கள்
விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும், அவர் யாருடைய ரசிகர் என்ற ரகசியத்தை மாளவிகா வெளியிட்டது விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக இருந்தது. 2019 ல் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் டைகர் ஷெராஃப்பின் தந்தை ஜாக்கி ஷெராஃப் தான் வில்லனாக நடித்தார்.


Click it and Unblock the Notifications











