எப்படிங்க இப்படி.. பிரியா பவானிசங்கரை நோக்கி ஓடி வரும் வாய்ப்புகள்.. காரணம் இதுதானாம்!
சென்னை : டிவி செய்திவாசிப்பாளராக இருந்து, பிறகு சின்னத்திரை, அதைத் தொடர்ந்து சினிமாவிற்கு வந்தவர் பிரியா பவானிசங்கர். மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியா பவானிசங்கருக்கு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றன.

தற்போது அடுத்தடுத்து பல பட வாயப்புக்கள் இவருக்கு குவிந்து வருகின்றன. மற்ற நடிகைகளுடன் ஒப்பிடுகையில் இவர் கைவசம் அதிக படங்கள் உள்ளன. இதனால் பிசியான நடிகைகளின் பட்டியலில் பிரியாவும் இணைந்துள்ளார்.
இப்படி பிரியா பவானி சங்கருக்கு அதிக பட வாய்ப்புக்கள் கிடைத்த அவரது க்யூட்டான எக்ஸ்பிரஷன், அழகான சிரிப்பு, வார்த்தை உச்சரிப்புக்கள் தான் என பலரும் நினைத்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் அது மட்டும் காரணமில்லையாம்.
மற்ற நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டு அடம்பிடித்து வரும் நிலையில், இவர் ஒரு படத்திற்கு ரூ.20 லட்சம் தான் சம்பளம் வாங்குகிறாராம். இதனால் தான் தயாரிப்பாளர்கள் அனைவரும் பிரியா பவானிசங்கரை தங்கள் படத்தில் புக் செய்ய போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்களாம்.
நடிகைகள் தங்களின் சம்பளத்தை தொடர்ந்து அதிகரித்து, தங்கள் மார்க்கெட் கூட்டி வரும் நிலையில் பிரியா பவானிசங்கரின் இந்த செயல் மற்ற நடிகைகளை பொறாமைப்படவும், அதிர்ச்சி அடையவும் வைத்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications











