‘ஜியா’வை வாழ்நாள் முழுதும் காதலித்துக் கொண்டே இருப்பேன் : சூரஜ் உருக்கம்

மும்பை: சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஹிந்தி நடிகை ஜியாகானின் காதலரான சூரஜ், தான் வாழ்நாள் முழுவதும் ஜியாவை காதலித்துக் கொண்டே இருக்கப் போவதாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

சென்ற மாதம் , மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இளம் ஹிந்தி நடிகையான ஜியாகான். அவரது தற்கொலைக்குப் முன் அவர் கைப்பட எழுதிய கடைசிக் கடிதம் என 6 பக்க கடிதம் ஒன்று போலீஸ் வசம் ஒப்படைக்கப் பட்டது.

அதில், நடிகர் சூரஜுடனான தனது காதல் முறிவைக் குறிப்பிட்டிருந்தார் ஜியா. அதனடிப்படையில் கைது செய்யப்பட்ட சூரஜ் பன்சாலி சமீபத்தில் ஜாமீனில் வெளி வந்தார். தற்போது ஜியாவுக்கும், தனக்குமான காதல் பற்றி ஆங்கில இதழ் ஒன்றில் மனம் திறந்திருக்கிறார் சூரஜ்.

பேஸ்புக் நட்பு...

பேஸ்புக் நட்பு...

கடந்த 10 மாதத்துக்கு முன்பு பேஸ்புக் மூலம் ஜியாகானுடன் நட்பு ஏற்பட்டது. அவர் மிகவும் நல்லவர். சிறிய விஷயங்கள் அவருக்கு சந்தோஷம் தந்தது. அவரது நட்பை முதலில் எனது தந்தை ஏற்கவில்லை. பின்னர் ஏற்றுக்கொண்டார். அவரது குடும்பத்தாரிடம் ஜியாகானுக்கு இணக்கமான உறவு இல்லை.

சந்தேகம்...

சந்தேகம்...

நான் நடிப்பு பயிற்சிக்கு சென்றபோது மற்ற பெண்களுடன் பழகுவதாக என் மீது ஜியாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பிறகு என்னுடனே ஜியா பயிற்சி பள்ளிக்கு வந்தார்.

கர்ப்பம் பற்றி தெரியாது...

கர்ப்பம் பற்றி தெரியாது...

ஜியாகானுடன் உறவு கொண்டீர்களா என்று போலீசார் என்னை கேட்டபோது, ஆமாம் என்று பதில் அளித்தேன். ஆனால் அவர் கர்ப்பமாக இருப்பதாக என்னிடம் கூறவில்லை.

ஒரு மாதத்திற்கு முன்பே...

ஒரு மாதத்திற்கு முன்பே...

ஜியா இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டோம். சினிமாவுலகில் வாய்ப்பு இல்லாததால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக எனக்கு தகவல் வந்தது.

ஜியா, ஐ லவ் யூ...

ஜியா, ஐ லவ் யூ...

இதுதொடர்பாக போலீசார் என்னை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். ஜியாவுடனான எனது உறவை மறைக்க விரும்பவில்லை. என் வாழ்நாள் முழுவதும் அவருடன் என்னை இணைத்து பேசினாலும் மறுக்க மாட்டேன். ஏனென்றால் இன்னும் அவரை காதலிக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X