அஜித்தின் அடுத்த 3 படங்கள் இது தானா...கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
சென்னை : அஜித் சமீபத்தில் தான் தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடினார். கொரோனா பரவல் காரணமாக தனது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து வீட்டிலேயே எளிய முறையில் பிறந்தநாளை கொண்டாடினார்.
அஜித் நீண்ட காலமாக நடித்து வரும் வலிமை படம் பற்றி இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இறுதி கட்டத்தில் இருக்கும் வலிமை பட சூட்டிங், கொரோனா இரண்டாம் அலையால் தொடர்ந்து தள்ளிப் போகிறது. வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய ஒரு சில காட்சிகள் மட்டுமே மீதமுள்ளது. இதனால் வலிமை படத்தின் வேலைகள் எப்போது முடியும் என தெரியாத நிலை உள்ளது.

பரபரப்பாக்கிய அடுத்த பட அப்டேட்
கொரோனாவால் அஜித்தின் 50 வது பிறந்தநாளன்று வெளியிடுவதாக இருந்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் ரிலீசும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள் அஜித் நடிக்கும் அடுத்த 3 படங்கள் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மீண்டும் வினோத் உடன் கூட்டணி
வலிமை படத்தின் டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பிலேயே அடுத்த படத்தில் அஜித் மீண்டும் நடிக்க உள்ளதாக பல தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. அஜித்திற்காக வினோத் கதை ஒன்றை தயார் செய்திருப்பதாகவும், அந்த கதை அஜித்திற்கு மிகவும் பிடித்து விட, மீண்டும் அவர் இயக்கத்திலேயே நடிக்க ஓகே சொல்லி விட்டதாகவும் கூறப்பட்டது.

மேலும் 2 படங்களா
இதற்கிடையில் வினோத் படத்தை தொடர்ந்து மேலும் 2 படங்களில் அஜித் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவியது. இவற்றில் ஒன்று சூரரை போற்று டைரக்டர் சுதா கொங்கரா இயக்கத்திலும், மற்றொன்று சிறுத்தை சிவா இயக்கத்திலும் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. சிறுத்தை சிவா, ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை முடித்த பிறகு அஜித் நடிக்கும் படத்தின் வேலைகளை துவக்குவார் என கூறப்பட்டது.

தீயாய் பரவிய வதந்தி
வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் அடுத்த படம், வலிமை ரிலீசுக்கு முன்பே துவங்கப்பட்டு விடும். வரும் ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த படங்கள் பற்றி சம்பந்தப்பட்ட டைரக்டர்கள் இதுவரை வாய்திறக்கவில்லை. இதனால் அஜித்தின் அடுத்த 3 படங்கள் பற்றிய தகவல்கள் வதந்திகள் என்றே சொல்லப்படுகிறது.
Recommended Video

அப்டேட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்
அஜித்தின் அடுத்த 3 படங்கள் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த டைரக்டர்களுடன் அஜித் இணைந்தால் நன்றாக இருக்கும் என்பது பலரின் விருப்பமாக உள்ளது. அஜித்தின் அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











